தமிழ்நாட்டின் ஒரு பிரிவாகிய பாண்டிய நாட்டிற்குத் தலைநகர் மதுரை. இக்கதை நடந்த காலத்தில் அரசு செலுத்திய பாண்டிய மன்னர் நல்ல அறிவுடையவர். குடிகளிடத்தில் மிகுந்த அன்பு உடையவர். அவர்களுடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்கை மட்டும் வரியாக வாங்கினார். வரிப் பணத்தை எல்லாம் குடிகளுடைய நன்மைக்கே செலவழித்தார். அவர் சொந்தச் செலவுக்குச் சிறிது பொருளே எடுத்துக் கொள்வார். அவர் நகரின் எல்லா பக்கங்களிலும் உடல் நலப் பாதுகாப்பு முறைகளைச் செய்து வந்தார். அவர் மக்களுக்குள்ளே பொய்யும், களவும்,… Read More »
Category Archives: சிறுகதைகள்
சிறுகதை: அப்புசாமி செய்த கிட்னி தானம் – பாக்கியம் ராமசாமி
படிக்கவேண்டிய முக்கிய குறிப்பு மனித உடம்பில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. சிலர் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறப்பதுண்டு. ஒரு சிறு நீரகத்தை ஆபரேஷன் செய்து எடுத்துவிட்டாலும் மற்றதைக் கொண்டு வாழமுடியும். சிறுநீரகங்கள் முதுகெலும்பின் பக்கத்துக்கு ஒன்றாக இடுப்பில் இருக்கும் பெரிய சுரப்பிகளாகும். இவை பெரிய மொசைக்கொட்டை போன்ற உருவமுடையன. – கலைக்களஞ்சியம் “சீதே!” அப்புசாமி பல்லை நறநறத்தார். “நீ என்னை ரொம்பக் கேவலப்படுத்தரே! ஒவ்வொருத்தனும் தாஜ்மகால் கட்டினான். நான் கேவலம் ஒரு பாத்ரூம் கட்ட ஆசைப்படறேன்… அதுக்கு… Read More »
சிறுகதை: கிளிண்டனை வரவேற்கிறார் அப்புசாமி – பாக்கியம் ராமசாமி
“அடியே கிழவி! இதெல்லாம் அபூர்வம்டி. பேப்பரிலே கொட்டை எழுத்திலே போட்டிருக்கானே. உன் காடராக்ட் கண்ணுக்குத் தெரியலையா? இருபத்திரண்டு வருஷத்துக்கு அப்புறம் நம்ம இந்தியாவுக்கு வர்றார்டி அமெரிக்க ஜனாதிபதி!” அப்புசாமி மனைவியிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். ஆந்திரா மஹிளா மண்டல் என்ற சமூக அமைப்புடன் சீதாப்பாட்டிக்கு நல்ல நெருக்கம். ஹைதராபாத்துக்கு விஜயம் செய்யும் கிளிண்டன், அங்குள்ள பிரபல மகளிர் சமுக நல மன்றம் ஒன்றுக்கு ஓரிரு நிமிடங்கள் வருகை தர ஒப்புக் கொண்டுள்ளதாக சீதாப்பாட்டிக்கு ‘ரிலயபிள் சோர்ஸ்’ மூலம் தெரிய… Read More »
சிறுகதை: வால்கள் போன உல்லாச பயணம் – ராஜேந்திரகுமார்
“திருச்சி!” “கிடையாது.” “சுவாமிமலை.” “சீ.. சீ..” “சீரங்கம்.” “என்னடி இது?” அலுத்துக் கொண்டாள் மைதிலி. “எல்லாம் குட்டிக் குட்டிகளாகவே சொல்கிறீர்கள்! நமக்கு வேண்டியது பெரிய ஊர். ஏண்டி, மெட்ராஸ் போனால் எப்படி?” “ஆகா!” பூரித்துப் போனாள் ரேவம்மா. “ஜோராயிருக்கும்! லைட் ஹவுஸில் ஏறி ஊரையே நல்லாப் பார்க்கலாம்.” “அதெல்லாம் வேண்டாமடி.” மீரா சொன்னாள். “அவ்வளவு தூர உல்லாசப் பயணத்திற்கெல்லாம் நம் ஸ்கூல் பஸ் தாக்குப் பிடிக்காது. பேசாமல் தஞ்சாவூர் முதல் கும்பகோணம் வரையுள்ள கோவில்களுக்கெல்லாம் போய்ச் சுற்றிவிட்டு… Read More »
சிறுகதை: அரசியல்வாதி – சாவி
அல்லிக்குப் பெண்குழந்தை பிறந்து பத்து நாட்களே ஆகியிருந்தன. தொழிலதிபர் அதியமான் இல்லத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் முதல் பெண் குவாகுவா! மகன் பாரி வழித்தோன்றல். வீடே குதூகலத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தது. ‘குழந்தையின் பொன்னிற மேனிக்குப் பொருத்தமாக அழகான ஒரு பெயர் சூட்ட வேண்டும். என்ன பெயர் சூட்டலாம்?’ என்று எல்லோரும் கூடி யோசித்துக் கொண்டிருந்த வேளையில்தான் கரைவேட்டித் தொண்டன் ஒருவன் ஓடிவந்தான். வந்தவன், “மரப்பாலம் திறக்க நாளைக்கு எம்.எல்.ஏ. ஐயா வராங்களாம்…” என்று மகிழ்ச்சிக் குரலில் சொல்லிவிட்டு… Read More »