தென்னகத்தில் தனது நகைச்சுவையாலும் சமய சந்தர்ப்பப் புத்திக் கூர்மையாலும் பேரும் புகழும் பெற்ற தெனாலிராமனைப் பற்றிய புகழ் வடநாட்டிலும் பரவத் தொடங்கிற்று. தில்லியில் அப்போது சக்கரவர்த்தியாக இருந்த பாபரும் இவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். இவனது நகைச்சுவையையும் விகட வேடிக்கைகளையும் தாமும் கண்டு களிக்க ஆர்வம் கொண்டு, ஒரு மாத காலத்திற்குத் தெனாலிராமனை அனுப்பி வைக்க, சக்கரவர்த்தி பாபர், கிருஷ்ணதேவராயருக்குக் கடிதம் எழுதினார். தம் அரசவையிலுள்ள ஒரு விகடக் கலைஞரின் திறமையை சக்கரவர்த்தி பாபரும் விரும்புகிறார் என்பதில் கிருஷ்ணதேவராயருக்கு… Read More »
