அரவம் கேட்டுக் கண்விழித்தாள் பாயம்மா. சிம்ணி விளக்கு வெளிச்சத்தில் யாசுமின், அடுப்படியில் டீ போட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. முந்தின இரவு உறக்கம் வர வெகு நேரம் பிடித்தது அவளுக்கு. சற்றுக் கண்ணயர்ந்து விட்டாள். அவளை முந்திக்கொண்டாள் யாசுமின். படுக்கையை விட்டு எழுமுன், ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் அவள் சொல்லும் அந்தக் காலைப் பிரார்த்தனையைச் சொல்ல முற்பட்டாள். ‘யாரசூயே, இன்றைய தினத்தை நல்ல நாளாக்கு. என் குட்டி யாசுமீனாளுக்கு நல்ல வழிகாட்டு, சடுதியில்’ இவ்வளவுதான்…. Read More »
