தமிழ்நாட்டின் ஒரு பிரிவாகிய பாண்டிய நாட்டிற்குத் தலைநகர் மதுரை. இக்கதை நடந்த காலத்தில் அரசு செலுத்திய பாண்டிய மன்னர் நல்ல அறிவுடையவர். குடிகளிடத்தில் மிகுந்த அன்பு உடையவர். அவர்களுடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்கை மட்டும் வரியாக வாங்கினார். வரிப் பணத்தை எல்லாம் குடிகளுடைய நன்மைக்கே செலவழித்தார். அவர் சொந்தச் செலவுக்குச் சிறிது பொருளே எடுத்துக் கொள்வார். அவர் நகரின் எல்லா பக்கங்களிலும் உடல் நலப் பாதுகாப்பு முறைகளைச் செய்து வந்தார். அவர் மக்களுக்குள்ளே பொய்யும், களவும்,… Read More »
