Author Archives: MBK

About MBK

Myself a Web Developer & Programmer want to explore more hidden places in our country and the marvels and hidden history behind those places.

சிறுகதை: பிழைப்பு – ரகுநாதன்

ஆபீஸ் வேலை முடிந்ததும் எழுந்து வெளியே வந்தேன். அன்று வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு யோசனை கிடையாது. பீச்சுக்குச் சென்று நல்ல பாம்பு மாதிரி ‘காத்துக் குடித்துவிட்டு’ வரவோ, பழைய புத்தகக் கடையில் பரிவர்த்தனை பண்ணவோ அல்லது மறுநாள் பாட்டுக்கு யாரிடமேனும் ‘அஞ்சு பத்து’ கைமாத்து வாங்கவோ, வரவேண்டிய கதைக்கு முன்பணமாக தவணை அச்சாரம் வாங்கவோ மனசும் இல்லை; வழியும் இல்லை. ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்ற மாதிரி எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு கப் காப்பிதான். ஆனால், பாக்கெட்டில் அதற்கு வழி உண்டா என்றால், அது இனிமேல்தான் தெளிவுபட வேண்டிய விஷயம். என் பையில் ரூபாய்க் கலத்தில் காசு புரளும்வரை எனக்குக் கணக்கும் தெரியாது; கண்ணும் தெரியாது. கரன்ஸிச் செலாவணி என்ற நிலை பிறழ்ந்து காசுச் செலாவணியில் வரும்போதுதான் நான் கையைக் கொஞ்சம் இறுக்கிப் பிடிப்பேன். ஆனால் தும்பைவிட்டு, வாலைப் பிடித்தால் முடியுமா?

பஸ் ஸ்டாண்டுக்கு வருமுன்னர் பையில் பஸ்ஸுக்கேனும் காசு இருக்கிறதா என்று துழவினேன். ஒண்ணே காலனாவுக்குமேல், ஒரு துரும்புகூட இல்லை. காபிக்குக் காசு இல்லை. ஆகவே இன்று வீட்டுக் காப்பிதான். ஆனால், அந்த ‘மூணே முக்கால் துட்டு’க்குச் செலவு வேண்டுமே!

ஆபீசிலிருந்து என் வீடு அதிக தூரமில்லை. குறுக்குப் பாதையாக நடந்து சென்றால், முக்கால் மைல் இருக்கும். பஸ்ஸில் சென்றால், ஒரு அணாக் காசுதான். இறங்கி நடந்துவிடலாம்.

பஸ்ஸில் சென்றால் ஒரு அணா; கால் அணா மிஞ்சும். ஆனால், இந்தக் காலத்தில் காலணா மிஞ்சுவதும் ஒன்றுதான்; மிஞ்சாமல் போவதும் ஒன்றுதான். பஸ்ஸில் செல்லாமல் பக்கத்து நாயர் கடையில் இரண்டு வில்ஸ் சிகரெட் வாங்கினால் அந்தக் காலணாவும் பயனுள்ளதாகப் போய்விடும். பையைத் துப்புரவாகத் துடைத்துவிட்டு சிகரெட்டைப் புகைத்தவாறே நடந்துவிடலாம். இந்தப் பணப் பெருக்கக் காலத்தில் காலணா என்ற நாணயம் வேறு எதனோடாவது ஒட்டிப் பிழைத்தால்தான் மதிப்புப் பெறமுடியும். காலணா மட்டும் தனித்தியங்க முடியாது. அப்போது அது செல்லாக் காசாக மாறிவிடும். ஆகவே அந்தக் காலணாவை வைத்துத் தர்மம் செய்யலாம்; அல்லது யானை வாயில் ஒதுக்கிவைத்த சுண்ணாம்புத் தேங்காய் மாதிரி சமயத்தை எதிர் நோக்கி, பர்ஸில் போட்டும் வைக்கலாம்…

இப்படியாக நான் சுய தர்ம விசாரணையில் மனம் கலங்கிச் சர்ச்சை செய்து கொண்டிருக்கும்போதுதான் என் காதில் அந்தப் பர தர்மம் விழையும் பரிதாபக் குரல் விழுந்தது.

திரும்பினேன்.

பஸ் ஸ்டாப்புக்கு அருகிலுள்ள பூவரச மர நிழலில் அந்தக் கிழவி ஓடியோடிக் கத்திக் கொண்டிருந்தாள்.

“அய்யாமாரே, அனாதைப் புணமுங்க; தூக்கிப் புதைக்கிறதுக்குக் கூட நாதியில்லைங்க. மவராசா, ஒரு காலணா தருமம் பண்ணுங்க” என்று பதறிப் பதறிக் கத்துவதும், அங்குக் கிடத்தப்பட்டிருந்த பிணத்தின் மீது தலைவிரி கோலமாய் விழுந்து மாரடித்துக் கதறுவதுமாக இருந்தாள்.

நான் பார்த்தேன்.

மரத்தடியில் அந்தப் பையனின் பிரேதம் கிடந்தது. உடம்பு நீட்டி நிமிர்த்திக் கிடத்தப்பட்டிருந்தது. பெரு விரல்கள் இரண்டும் சடம்புக் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. வாயின் கடையோரத்தில் உமிழ்நீர் வழிந்தோடியிருந்தது. கண்ணில் சந்தனம் அப்பப்பட்டிருந்தது. நெற்றியிலே ஈரம் கலையாத விபூதிப் பூச்சு!

அதைப் பார்க்கவே பரிதாபமாய்த் தானிருந்தது. மத்தியானம் நான் டீ குடிக்க வெளியில் வந்தபோது, அந்தப் பையனும்தான் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்! அதற்குள்ளாகவா இந்த மரணம்? வேளாவேளைக்கு வயிற்றுக்கு உணவில்லாமல் அணு அணுவாய்ச் செத்து வருபவனுக்கு சாவு என்பது திடீரென்று கொதிநிலை அடைந்த தண்ணீரைப் போலத்தான் இருக்குமா? சே! என்ன அநித்யமான வாழ்வு? இந்தக் கிழவியும் மத்தியானம் தனக்கு வருகிற ஒன்றிரண்டு காசையும் அந்தப் பையனுக்கே தத்தம் செய்து விட்டாளே! அதற்குள்ளாகவா இந்த அவச்சாவு?…

பஸ் ஸ்டாண்டில் நின்றவர்கள் தரும சிந்தையோடு காலணா அரையணா போட்டார்கள். பிணத்தின்முன் விரித்திருந்த துண்டில் காசு சேர்ந்தது.

என்னாலும் தருமம் பண்ண முடியாமல் இருக்க முடியவில்லை. பர்ஸிலிருந்து காலணாவை எடுத்து விட்டெறிந்தேன். ‘கடைசிக் காசை ராஜாவைப் போல் செலவழி’ என்று சொன்ன இங்கர்ஸாலின் பொன்னுரை ஞாபகத்துக்கு வராவிட்டாலும், அடுத்தபடியாக நான் செய்த காரியம் காரில் ஏறியதுதான். ஆகவே, அந்த ஒண்ணே காலணாவை எப்படிச் செலவழிப்பது என்ற யோசனையும் தானே தீர்ந்துபோய் விட்டது.

காரில் சென்றபோதும், லஸ்ஸில் இறங்கி நடந்தபோதும் என் மனசில் ஒரே ஒரு சிந்தனைதான் மிஞ்சி நின்றது.

‘அவளுக்கும் அந்தப் பையனுக்கும் எந்தவித ரத்தபந்தமும் இல்லை; என்றாலும் அவள் ஏன் அந்தப் பிணத்துக்காக விழுந்து விழுந்து கதறவேண்டும்? மனித குணத்தின் நல்லுணர்ச்சியாலா? அதெல்லாமிருக்க முடியாது. மற்றவர்கள் இதயத்திலுள்ள கருணை, அன்பு, அனுதாபம் போன்ற நல்லுணர்ச்சிகளைச் சூறையிட்டு, அதன் மூலம் தனது வயிற்றைக் கழுவிக் கொள்ளவே அந்தக் கிழவி வழி பார்க்கிறாள். நானும்தான் என்ன செய்கிறேன்? எழுத்தாளன் என்ற சாக்கில் மனித உள்ளத்தில் கிடந்து தூங்கும் கருணையுணர்ச்சிகளைத் தூண்டி சமூகத்தின் கண்ணீரை வரவழைத்து காசு வாங்குகிறேன்! ஆனால் இந்தக் கிழவி இதற்கு முன்னெல்லாம் தனக்குக் கிடைக்கும் தர்மக் காசை இந்தப் பையன் இடையில் விழுந்து தட்டிக் கொண்டுபோய்விடுகிறான் என்பதற்காக, அந்த இடத்திலிருந்து அவனை விரட்டியடித்து, அந்த ‘வியாபார ஸ்தலத்தை, தனக்கே ஏகபோக உரிமையாக்கிக்கொள்ள நினைத்தாளே. ஆனால் இப்போதோ…?’

“தருமப் பிரபுக்களே, பெத்த வயிறு எரியுதய்யா! எம்புள்ளையைப் பார்க்க முடியலையே. ராசா! நீ போயிட்டியடா கண்ணு! உன்னை இப்படி அனாதைப் புணமாய் பார்ப்பதற்கா பெத்துப் போட்டேன். ஐயா, ஒரு காலணா கொடுங்க” என்று கதறினாள் கிழவி.

– பெற்ற வயிறா?

‘நிச்சயமாய் இருக்க முடியாது. அவளையும், அந்தப் பையனையும் நான் எவ்வளவோ காலமாக அறிவேன். அவர்கள் இருவரும் தாயும் பிள்ளையும் அல்ல. அவன் வேறு; அவள் வேறு. அதுமட்டும் நிச்சயம். இருந்தாலும் அவளும் பெண்பிள்ளைதானே. ஆயிரம்தான் தொழில் முறையில் விரோதங்கள் இருந்தாலும், அவளுக்கும் இருதயம் என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்? அவளும் மனுஷிதானே. தன் கண் முன்னே செத்து விழுந்த பையனைக் காணும்போது அவளுக்கு நெஞ்சம் கலங்காதா? அப்படியானால் பெற்ற வயிறு என்று சொல்லி ஏமாற்றுவதன் காரணம்? 

‘எத்தனையோ ‘தருமப் பிரபுக்களின்’ மனசுக்குள் உறுத்தும் உணர்ச்சிகளைக் கிண்டிவிட்டு அல்லது திருப்திப்படுத்தி என் எழுத்தின் மூலம் எனது பசியைத் தணித்துக்கொள்ள வழிபார்க்கிறேனே. அதுபோலவேதான் அவளும் பிழைப்பு நடத்துகிறாளா? அந்தப் பையனின் மரணத்தில்தான் அவளது ஜீவனம் நடக்க வேண்டுமா? ஏன், ஊரானின் சவத்தின்மீதுதான் உலகத்தின் பிழைப்பே நடக்கிறதா? ஒருவன் பிழைக்க வேண்டுமென்றால் இன்னொருவன் செத்து ஆகவேண்டுமா? அல்லது சாவதுதான் பிழைக்கிற வழியா?…

‘இல்லை, யாருமே சாகவேண்டியதில்லை; சாவதற்குக் காரணமாயுள்ள சமுதாய அமைப்புதான் சாகவேண்டும்! ஒருவனைச் சாகடித்து மற்றவன் வாழ விரும்பினால், முதலில் அவன்தான் சாகவேண்டும்!….

என் மனம் என்னென்னவோ அழிவுக் கோட்டைகள் கட்டி அலைக்கழிந்து கொண்டிருந்தது.

அன்றைக்குக்  காப்பி சுகப்படவே இல்லை;கஷாயம் மாதிரிக் கசந்தது.


இரவு படுக்கைக்குப் போன பின்னும் அந்தச் சிறுவனின் பிரேத உருவமே என் கண்முன் நின்றுகொண்டிருந்தது. ‘சாமி நேத்துக் காலையிலே நான் பிச்சை கேட்டப்போ. தரமாட்டேன்னியே. இப்போ நான் செத்துப் போய்ட்டேன். இனிமே உன் பிச்சையும் வேணாம். நீயும் வேணாம்’ என்று அவன் சொல்வது போல இருந்தது.

 எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை.

அந்தக் கிழவியையும், பையனையும் நான் கொஞ்ச காலமா அறிவேன். எங்கள் ஆபீசுக்கு முன்னுள்ள பஸ் ஸ்டாண்டுதான் அவர்கள் வீடு, வாசல், குடியிருப்பு எல்லாம்.

கிழவிக்குக் கிட்டதட்ட அறுபது வயதிருக்கலாம். எனினும் தலையெல்லாம் பறட்டையாகி சூம்பிப் போட்ட பனங்கொட்டை மாதிரி திரிதிரியாய் இருக்கும். முழு நரை; எண்ணெய் அறியாததால் அதில் பளபளப்புக்கு இடமில்லை. சொத்தையாடித் தெறித்துப்போன இரண்டு குறைப் பற்களைத் தவிர வேறு பல் கிடையாது. முகம் சுருக்கு விழுந்த ஈரத் துணி மாதிரி வதங்கிக் கிடக்கும். இடையில் கந்தல் கந்தலான ஒரு சேலை, தனது நிஷ்காம்ய சேவை பங்கப் பட்டுவிடக் கூடாதே என்று ஒட்டி ஒடுங்கிக் கிடக்கும்.

அவள் தினம் தினம் பிச்சை யெடுப்பாள். காரில் ஏறவரும் ஆத்மாக்கள் யாரேனும் தாராளமாய் மடியவிழ்த்தால் உண்டு. ஆனால் ஒவ்வொரு பஸ்ஸாக  இடமில்லாமல் தவறவிட்டுத் தவிக்கும் நபர்களுக்கு தரும சிந்தனைக்கு இடமிராதுதான். எனினும் சிலர் அவர்களுக்கு தருமம் செய்ததன் புண்ணியமாகவாவது, அடுத்த பஸ்ஸில் இடம் கிடைத்துவிடாதா என்ற நம்பிக்கையில் காலணா அரையணா விட்டெறிவதும் உண்டு. ஆனால் அரச மரத்தைச் சுற்றி விட்டு, அடிவயிற்றைத் தொட்டுப் பார்ப்பதில் எவ்வளவு அர்த்தம் உண்டோ அவ்வளவுதான் இதிலும் உண்டு.

அந்தப் பையனும் அப்படிதான். ‘சாமி! தாயில்லாப் பிள்ளை, சாமி’ என்று சொல்லிப் பிச்சை யெடுப்பான்.

அவர்கள் இருவரும் பிச்சை எடுப்பதை நான் எவ்வளவோ காலமாகப் பார்த்து வந்திருக்கிறேன்; என் பையில் கடைசியாக மிஞ்சும் காலணாவையும் அவர்களுக்கு விட்டெறிந்து சித்ரகுப்தனின் தருமச் சிட்டையில் நானும் இடம் பெற முயன்றிருக்கிறேன். சமயங்களில், ‘சரி தாண்டா, போடா. நீ கைநீட்டிப் பிச்சை எடுக்கிறே; நான் அதைச் செய்யலே’ என்று முப்பது முப்பத்தோராம் தேதிகளில் எரிந்தும் விழுந்திருக்கிறேன்.

அவர்கள் பிழைப்பு அந்தப் பிச்சையிலேதான் நடந்து வந்தது. பிச்சையெடுக்கும் அவர்களால் சேர்த்து வைக்க முடியாது. ‘நாலணா சேர்ந்தது; பக்கத்து ரிக்‌ஷா ஸ்டாண்டுக் கூடைக்காரியிடம் ஒரு கவளம் சோற்றை வாங்கித் தின்றோம்’ என்றும் கிடையாது. ஓரணா சேர்ந்ததுமே பக்கத்து நாயர் ஹோட்டல் அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும். உடனடிப் பிரச்சினையாகத் தோன்றித் தோன்றி வரும் பசியை, தற்காலிகமாகத் தணிக்கவெண்ணி நாயர் ஹோட்டலில் ‘டி சிங்கிள்’ சாப்பிடுவார்கள்; அதன் மூலம் பசியைத் தணித்துக்கொள்ள முடியாவிட்டாலும் பசியைக் கொன்று விடுவார்கள்.

சமயங்களில் அவர்கள் இருவருக்கும் சண்டையும் மூண்டு விடுவதுண்டு.

‘பிசாசே! நீயேன் இங்’னெ வந்து பிச்சை யெடுக்கே? உனக்குப் பேதி வராதா? போயேன், அந்த இஸ்டாண்டுக்கு. இங்’னே வந்து என் புயைப்பிலே ஏன் மண்ணைப் போடுதே?’ என்று சீறுவாள் கிழவி.

‘நீதான் போயேன்!’ என்று பையன் துணிந்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, மீண்டும் கை நீட்ட ஆரம்பித்து விடுவான்.

இருவரும் தொழில் முறையில் அநேகமாக எதிரிகளாகவே பழகி வந்தார்கள்! எனினும் அந்த பையனின் திடீர் மரணம்?

‘என்ன இருந்தாலும் அவளும் ஒரு பிள்ளையையாவது பெற்று, கொஞ்சிக் குலாவியிருக்கமாட்டாளா? அவளுக்கும் இதயம் கிடையாதா? பாவம்… அந்தப் பையன் செத்ததால், தனக்கு இனி தொழில் வட்டாரத்தில் ஏகபோக  ஆதிபத்யம் கிடைக்கும் என்று தெரிந்தபோதிலும், அவள் ஏன் கண்ணீர் விடுகிறாள்? அவளும் மனுஷி! அவளும் கருணை உணர்ச்சியுள்ள கட்டை!

‘அப்படித்தானா?…’

நான் எப்போது தூங்கினேனோ, எனக்குத் தெரியாது.


மறு நாள் காலையில் நான் சாப்பாட்டை முடித்துவிட்டு, ஆபீசுக்குக் கிளம்புமுன் டிராயரைத் துழாவினேன்; அதில் அரையணாக்கூட இல்லை. ‘சரி. போனால் போகுது’ என்று பொடி நடையாக வண்டியைத் தட்டிவிட்டேன். வரும் வழியெல்லாம் அந்த கிழவியும் பையனுமே என் மனசில் வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘இன்று அந்தக் கிழவி தனியாகத்தான் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பாள். அந்தப் பையனின் உடம்பும் இதற்குள் புதைபட்டுப் போயிருக்கும். இன்று அவளைப் பார்க்கவேண்டும். எதிரி தொலைந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியோடிருப்பாளா அல்லது தனது தொழில் முறைக்காகவும் பேச்சுத் துணையுமாயிருந்தவன் போய்விட்டானே என்ற வருத்தத்தோடு இருப்பாளா?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டே நடந்தேன். நடக்கும்போது யோசிக்க ஏதாவது வேண்டுமே!

ஆபீசை நெருங்கியதும் என் பார்வை பக்கத்துச் சந்தில் திரும்பியது.

அங்கு நான் கண்ட காட்சி –

சந்துக்குள் அந்தக் கிழவியும் அந்தப் பையனும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கிழவி சந்தனத்தை அவனுடைய மூடிய கண்களில் அப்பிக் கொண்டிருந்தாள்; பையன் தன் இரு பெருவிரல்களையும் சடம்புக் கயிற்றால் கட்டிக் கொண்டிருந்தான்.

“ஏ, கெய்வி! கண்ணுலே மெதுவா அப்பு. ஒரேயடியாய்க் கரிக்குது” என்றான் பையன். அதுவும் என் காதில் விழத்தான் செய்தது. ஆம், அந்தப் பையன் சாகவில்லை!

எனக்கு மண்டையில் ஓங்கியடித்த மாதிரி இருந்தது.

‘அப்படியானால் நேற்று நடந்ததெல்லாம் ஒரே மாய் மாலம் தானா? அந்தப் பையன் செத்துப்போன மாதிரி நடிப்பதும், அவள் பெற்றுப்போட்ட தாய்மாதிரி அலறுவதும் அவர்களுக்குள் நடந்துகொண்ட வியாபார ஒப்பந்தம்தானா? எப்படி மதகுரு, ஏசுவின் சிலுவைப் புண்களைக் காட்டிக் காசு பறிக்கிறானோ, எப்படி வயிற்றில் சேலையைப் பொதிந்து கட்டிக்கொண்டு பிள்ளைத்தாச்சி என்று கூறி, சில பெண்கள் பிச்சை எடுக்கிறார்களோ, எப்படி உடம்பிலும் நாக்கிலும் வேல் ஊசிகளைக் குத்திக்கொண்டு முருகன் பேர் சொல்லிச் சிலர் பிச்சை எடுக்கிறார்களோ, எப்படி எழுத்தாளன் சோகக் கதைகளை எழுதி, பிழைப்பு நடத்துகிறானோ அப்படித்தான் இவர்களும் பிழைக்கிறார்கள். உலகில் நல்லபடியாய் பிழைக்க முடியாதா? மனிதனின் நல்லுணர்ச்சிகளைச் சுரண்டித்தான் பிழைக்க முடியுமா?’

எதுவும் புரியாமல் ஆபீசுக்குள் சென்றேன். அங்கு யாரோ, யாரிடமோ “இது என்னங்க, வெறும் செத்த பிழைப்பு!” என்று கூறுவது காதில் விழுந்தது.

‘அப்படியா? இந்த சமுதாய வாழ்க்கையே வெறும் செத்த பிழைப்புதானா? இல்லை. இல்லவே இல்லை. பிழைப்பு வேறு; வாழ்க்கை வேறு. நாம் நம் வயிற்றைக் கழுவ நினைப்பது பிழைப்பு, சமுதாய முழுமைக்கும் வயிற்றைக் கழுவ வழிகாண்பது வாழ்க்கை. நாம் வாழ்வதற்காகவே பிழைக்க வேண்டும்; பிழைப்பதற்காக வாழக் கூடாது! இந்த எண்ணம் எனக்கு, உங்களுக்கு, அந்தக் கிழவிக்கு, அந்தப் பையனுக்கு எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டால், நாம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியதில்லை; நன்றாக, பரிபூரணமாக வாழ்ந்த திருப்தியோடேயே சாகலாம்…’

அன்றைய மாலைக் காப்பி கசக்கத்தான் செய்தது என்றாலும் அந்தக் கசப்பில் நல்ல ருசியும் இருந்தது.

Share this post:

The Lonesome Gods – Louis L’Amour

1

I sat very still, as befitted a small boy among strangers, staring wide-eyed into a world I did not know.

I was six years old and my father was dying.

Only last year I had lost my mother. She died longing for that far-off, lovely California where she was born, and of which she never tired of talking.

“Warm and Sunny,” people said when speaking of California, but I knew it as a place where fear lived.

Now we were going there. We were crossing the desert to face that fear, and I was afraid.

My father sat close beside me trying to sleep, but torn occasionally by violent spells of coughing that caused the other passengers to turn their heads, some in pity, some in irritation.

Our wagon, drawn by six half-wild mustangs, plunged into the night, rocking and rumbling over a dim track that only the driver seemed to see. Ours was a desperate venture, a lone Wagon with two outriders attempting the crossing from Santa Fe to California.

Lying awake in the darkness, I remembered what people in Santa Fe had said. “It’s a crazy idea! One wagon? Even if they can slip by the Apaches, the Yumas will be waiting at the crossing of the Colorado.”

“Remember what happened to that last outfit? The Yumas agreed to ferry them across the river, but when they had half of them on the far side, the Yumas just took off with all their goods and stock. Left ’em to die in the desert, with nothing.”

“Only they didn’t die. Not all of them.”

“I’ll say one thing. If anybody could take a wagon through alone, it would be Doug Farley.”

“Maybe. But he’s only one man. As for me, I’ll just wait until spring and go through with a wagon train.”

When I told my father what they had said, he nodded. “We have to go now, son. I cannot wait.” He hesitated, then continued. “Some folks would think me wrong to tell you of this, but you must be prepared.

“I cannot wait until spring, Johannes. The doctors say I haven’t that much time. They say I am going to die. You will have to grow up without me, and growing up is never easy. People only talk about how wonderful youth is when they have forgotten how hard it was.”

We had gone together to see the wagon. Doug Farley had built it for the purpose, and the planks were not only tightly fitted but caulked so it would float if need be. The side walls were lined with a double thickness of buffalo hide to add more protection from bullets.

Eight people could ride in the wagon in some comfort, but on this trip there would be but six, including me, and I wasn’t very large. Each man and woman was required to have a rifle in good condition and at least two hundred rounds of ammunition. Each was required to demonstrate that he or she knew how to load and fire his or her weapon.

“We will travel by night,” Farley warned us, “wherever possible. No loud talking, no noise. No shooting unless we are fired upon.”

“What about hunting?” The question was asked by a thick-necked, powerful man in a black suit. His name was Fletcher. He had a square, brutal face with small eyes. I did not like him.

“There will be no hunting,” Farley answered. “We have supplies enough, so there will be no need. A shot would only attract the trouble we’re trying to avoid.”

“You’ve been over this trail?”

“Five times, and I’ve scouted it just for this trip. Every stopping place is chosen now, and I’ve selected alternatives if something goes wrong.”

“How’d it go before?”

“The first time was with a party of mountain men. We had one hell of a fight-five men killed, and we lost our furs.” 

“The other times?”

“The army survey party was strong and we had no trouble except for losing some mules and one man who just wandered off and was lost.”

“Another time, with a wagon train, we got through to Los Angeles, losing only two wagons some stock.”

“Los Angeles? What’s that?”

“It’s a little cow town about twenty miles from the sea. Used to be an Injun village. That’s the place we’re heading for.”

“What’s this here trip goin’ to cost?”

“Three hundred dollars each. Cash on the barrel head.”

“That’s a lot of money.”

“Take it or leave it. If you wait until spring, you can go through for half that. Maybe less. I am taking people who wish to go through now.” He paused. “We leave at daybreak.”

“How about my son?” my father asked.

Farley glanced at me. His eyes lingered for a moment. “He’s small. He can go for one hundred dollars.”

“That’s not fair!” Fletcher was irritable. “You asked for people who could handle guns. That boy certainly can’t.”

My father turned slowly to look at Fletcher. “As to that, my friend, we shall see. In the meantime, I believe I can shoot well enough for both of us.”

“What the hell does that mean?”

Father glanced over at Farley. “Mr. Farley? I am Zachary Verne.”

Doug Farley lit his cigar and dropped the twig back into the fire. “That’s good enough for me.”

“But-”

Farley ignored the interruption. “He goes,” he said, and walked away.

My father dropped a hand to my shoulder. “Let’s get our gear together, son.”

As they walked away, I heard the heavyset man, Fletcher, protesting to the others. “Now, what does all that mean? He just says his name and Farley’s ready to take him on. The way he coughs, he won’t last the trip!”

“Whoever he is,” someone said, “Farley knew him.”

At our room my father told me to wait and he went in to pick up our few things. I sat on the bench shivering, thinking of that fierce old man who awaited me in Los Angeles. He had hated my father, and when my father and mother fled across the desert, he pursued them, hoping, it was said, to kill them both.

Nor dared I tell my father how frightened I was. He did not know of the times I overheard my parents talking when it was believed I was asleep. “After all,” I had heard my father say, “he is the boy’s grandfather. How could he hate his grandson?” And then he added, a note of desperation in his voice, “There is nobody else, Connie, nobody at all.”

Once my father had been tall and strong; now he was pale and shrunken from illness of the lungs and now he grieved for the wife he had loved and the son he would never see grow to manhood.

A dozen times, seeking some way out, they had repeated almost the same conversation. “Zack,” my mother would say, “what else can you do? There is nobody else.”

Then suddenly one night, only shortly before my mother’s death, my father had suddenly burst out, “There’s that other thing, Connie! If only I’d had sense enough to keep my mouth shut! He would never have known that I knew!”

“You were angry, Zack. You didn’t think.”

“I was angry, but that is no excuse. I was angry for Felipe. He would have told no one, but he was killed. Murdered.

“How could a man fall off a cliff he had walked and ridden a hundred times, in dark and daylight, in storm and wind? The night was moonlit, the trail was clear, and Felipe was a careful man. No, it was murder, it had to be murder.”

“I know my father is a hard man, but-”

“He is a proud man, Connie. Pride of name and pride of family are an obsession with him. Of course, he isn’t the only one. Most of the old Spanish families are that way. The difference is that in California some of the first settlers were simply soldiers or mule drivers, and those who came later did not wish to be associated with them.

“In your father’s world a gentleman did not work with his hands, and a gentleman was always a man on horseback. In my world men who worked with their hands, main who could do, were the most respected. When I met you I was an able-bodied seaman, even though my father was a ship’s captain, and that was what I intended to be.

“In his world a man like me never spoke to a man like him unless addressed, and then only with hat in hand and head bowed. To make it even worse, I was an Anglo and a Protestant. I don’t know how I had the courage to speak to you.”

My mother’s voice was low, but I heard her say, “I wanted you to. You were very handsome. My mother thought so, too.”

“Then three of your father’s vaqueros came to me and said if I ever spoke to you again, they would horsewhip me.”

“I heard of that.”

“I told them they were fine men, handsome men, it would be a pity for them to die so young.”

“I heard it, Zachary, I heard them talking of it. We women, we cannot speak much, but we can listen, and there was very little we did not hear. They admired you for it. I remember one of them saying, ‘He is a man, that one!’”

There was silence; then my father asked, in a much lower tone, “Connie? Did Felipe know?”

“I… I believe so. What other reason…? I mean, he was a fine old man. He had been with us forever, it seemed.”

“But why that night? What happened?”

There was no answer, and lying in the darkness and listening, eyes wide with wonder, I knew there would be no more talking. Whenever that subject came up, conversation ended. My mother would talk no more.

What dreadful secret could there be that so frightened my mother? What was it my grandfather feared to have known?

The wagon went westward in the morning, driving over a hard-packed trail, simply one wagon alone, that might be going anywhere. Only when we neared the lava beds did we begin traveling by night.

After that there were usually no more campfires at night, and those by day were brief, for cooking and coffee. By day the horses grazed and the men slept, always in carefully selected places where they were hidden from observation. One of the outriders was forever on guard. I came to know them both.

Jacob Finney was a man of medium height, a man who never seemed to smile, but with a droll sense of humor. He was a slim, wiry man, part Cherokee, and from northern Georgia. “Been huntin’ my own meat since I was frog-high,” he told me. “I was nigh onto seventeen before I et meat I didn’t shoot myself.”

He was twenty, he said, but he seemed older. “Pa, he up an’ died, leavin’ the place to Amby an’ me. Amby was fixin’ to marry, an’ that place wouldn’t support the both of us, so I taken out.”

He paused. “Amby’s wife was a Natchez woman. You know about them? They was a different kind of Injun. Worshiped the sun. They got theirselves into a friction with the French from Loosiana and those Frenchmen wiped’em out. Well, almost.

“Them that got away, some came into our mountains, an’ Amby, he taken up with one. She was a rare kind of woman, tall and mighty handsome. She’d been one of their top folks, one of the Suns, as they called them. Amby, of course, he’s a fine-lookin’ man. Tall, strong, and better educated in his books than me. I taken to the deep woods and far country, he taken to readin’, talkin’, and the like.

“Well, seein’ them together, it looked like I was the odd number, so I told ’em to hold a plot in the buryin’ ground and I taken off west.

“Had me some Injun fights then, one led by a man name of Karnes where twenty-odd of us stood off more’n two hundred Injuns. We gave ’em what-for, we did.”

The other outrider, Kelso, was an older, quieter man, a man with dark red hair streaked with gray. He’d made two trips over the Santa Fe Trail as a teamster and was a veteran of two or three fights with the Kiowa and Comanche.

Steadily we moved westward, keeping of the skyline but using the high, wide-open country of a night when it was possible. Before daybreak we’d be holed up in one of those hideouts Farley had scouted long before. There we would sleep, read, play cards, or wonder the hot days through, waiting for the blessed coolness of the night.

Inside the wagon we talked little, and Papa least of all. Papa was a sociable man most of the time, but on this trip he kept to himself. Maybe it was his illness, but maybe it was something else, something that worried him more and more as he drew closer to California.

Jacob Finney rode up beside me one day when we were walking to ease the horses. We’d been on the trail no more than an hour, and it was coming on to moonlight.

“Want a ride, son? You can he’p me look for Injuns.”

One of the passengers spoke up. “You will frighten the child.”

“No, sir,” I said. “I ain’t… I mean, I’m not frightened.” Although I was, a little bit.

He took me up on the saddle in front of him. “We don’t talk,” he said, “we listen. Injuns mostly sleep of a night, but sometimes they are late gettin’ back to their lodges, just like we are. We want to kind of ease by ’em, like.”

“We could fight.”

“Yes, son, we could, but fightin’s something you do when you’ve tried everything else.”

Share this post:

சிறுகதை: செவ்வாழை – பேரறிஞர் அண்ணா

செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப்பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும்கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டு இருக்கிறதா என்று கவனித்துவிட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும்போதும், அவன் கண்கள் பூரிப்படையும் மகிழ்ச்சியால். கரியனிடம் – அவனுடைய முதல் பையன் – காட்டியதைவிட அதிகமான அன்பும், அக்கரையும் காட்டுகிறாரே, என்று ஆச்சரியம், சற்றுப் பொறாமைகூட ஏற்பட்டது, குப்பிக்கு.

“குப்பி! ஏதாச்சும் மாடுகீடு வந்து வாழையை மிதிச்சுவிடப் போகுது. ஜாக்ரதையாக் கவனிச்சுக்கோ. அருமையான கன்று – ஆமாம், செவ்வாழைன்னா சாமான்யமில்லே. குலை, எம்மாம் பெரிசா இருக்கும் தெரியுமோ? பழம், வீச்சு விச்சாவும் இருக்கும், உருண்டையாகவும் இருக்கும் – ரொம்ப ருசி – பழத்தைக் கண்ணாலே பார்த்தாக்கூடப் போதும், பசியாறிப் போகும்” என்று குப்பியிடம், பெருமையாகப் பேசுவான், செங்கோடன்.

அப்பா சொல்லுவதை நாலு பிள்ளைகளும் ஆமோதிப்பார்கள் – அதுமட்டுமா – பக்கத்துக் குடிசை, எதிர்க் குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடமெல்லாம், இதே பெருமையைத்தான் பேசிக் கொள்வார்கள். உழவர் வீட்டுப் பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக் கொள்ள முடியும் – அப்பா வாங்கிய புதிய மோட்டாரைப் பற்றியா, அம்மாவின் வைரத்தோடு பற்றியா, அண்ணன் வாங்கிவந்த ரேடியோவைப் பற்றியா, எதைப்பற்றிப் பேசமுடியும்? செவ்வாழைக் கன்றுதான், அவர்களுக்கு, மோட்டார், ரேடியோ, வைரமாலை, சகலமும்!

மூத்த பயல், கரியன், செவ்வாழைக்குலை தள்ளியதும், ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான் – என்று சொல்லுவான்.

“ஒண்ணுக்கூட எனக்குத் தரமாட்டாயாடா – நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன், கவனமிருக்கட்டும் – வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன், கவனமிருக்கட்டும்” – என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்.

கரியனின் தங்கை, காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக் கொண்டே “உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு” என்று குறும்பாகப் பேசுவாள்.

மூன்றாவது பையன், முத்து, “சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதீங்க ஆமா பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்துடுவாங்களோ, யாரு கண்டாங்க” என்று சொல்லுவான் – வெறும் வேடிக்கைக்காக அல்ல – திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்தேவிட்டான்.

செங்கோடனின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை. உழைப்பு அதிகம், வயலில். பண்ணை மானேஜரின் ஆர்ப்பாட்டம் அதிகம். இவ்வளவையும், சகித்துக் கொள்வான் – செவ்வாழையைக் கண்டதும் சகலமும் மறந்து போகும். குழந்தைகள் அழுதால், செவ்வாழையைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவான்! துஷ்டத்தனம் செய்கிற குழந்தையை மிரட்டவும், செவ்வாழையைத்தான் கவனப்படுத்துவான்! குழந்தைகள், பிரியமாகச் சாப்பிடுவார்கள், செவ்வாழையை என்ற எண்ணம் செங்கோடனுக்கு. பண்ணை வீட்டுப் பிள்ளைகள், ஆப்பிள், திராட்சை, தின்ன முடிகிறது – கரியனும் முத்துவும், எப்படி விலை உயர்ந்த அந்தப் பழங்களைப் பெற முடியும்? செவ்வாழையைத் தந்து தன் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணந்தான், செங்கோடனை, அந்தச் செவ்வாழைக் கன்றைத் செல்லமாக வளர்க்கும்படி செய்தது. உழவன் செங்கோடனிடம், எவ்வளவு பாடுபட்டாலும், குழந்தைகளுக்குப் ‘பழமும்பட்சணமும்’ வாங்கித்தரக்கூடிய ‘பணம்’ எப்படிச் சேர முடியும்? கூலி நெல், பாதி வயிற்றை நிரப்பவே உதவும் – குப்பியின் ‘பாடு’ குடும்பத்தின் பசியைப் போக்கக் கொஞ்சம் உதவும். இப்படிப் பிழைப்பு! உழைப்பின் பெரும்பகுதி வயலிலே செலவாகிறது – அதன் பலனில் மிகப் பெரும்பகுதியோ, பண்ணைக்குச் சேர்ந்துவிடுகிறது. இந்தச் ‘செவ்வாழை’ ஒன்றுதான், அவன் சொந்தமாக – மொத்தமாக, பலன் பெறுவதற்கு உதவக்கூடிய, உழைப்பு! இதிலே! பங்கு பெற, பண்ணையார் குறுக்கிட முடியாதல்லவா? அவருக்காகப் பாடுபட்ட நேரம் போக, மிச்சமிருப்பதிலே, அலுத்துப்படுக்க வேண்டிய நேரத்திலே, பாடுபட்டு, கண்ணைப்போல வளர்த்துவரும், செவ்வாழை! இதன் முழுப்பயனும் தன் குடும்பத்துக்கு! இது ஒன்றிலாவது தான்பட்ட பாட்டுக்கு உரிய பலனைத் தானே பெற முடிகிறதே என்ற சந்தோசம் செங்கோடனுக்கு.

இவ்வளவும் அவன் மனதிலே, தெளிவாகத் தோன்றிய கருத்துகள் அல்ல. புகைப்படலம்போல, அந்த எண்ணம் தோன்றும், மறையும் – செவ்வாழையைப் பார்க்கும்போது பூரிப்புடன் பெருமையும் அவன் அடைந்ததற்குக் காரணம் இந்த எண்ணந்தான்.

கன்று, வளர்ந்தது, கள்ளங் கபடமின்றி.  செங்கோடனுக்குக் களிப்பும் வளர்ந்தது. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது, விளையாட்டு இடமே, செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும், ஏற்படும் பிரேமைபோல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம், பாசம் ஏற்பட்டுவிட்டது.

“இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா?” – கரியன் கேட்பான், ஆவலுடன், செங்கோடனை.

“இரண்டு மாசமாகும்டா கண்ணு” என்று செங்கோடன் பதிலளிப்பான்.

செவ்வாழை குலை தள்ளிற்று – செங்கோடனின் நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டுவிட்டது. நிமிர்ந்து பார்ப்பான், குலையை, பெருமையுடன்.

பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப்பெண் முத்துவிஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய வைரமாலையைக்கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்கமாட்டார்! செங்கோடனின் கண்களுக்கு, அந்தச் செவ்வாழைக்குலை, முத்துவிஜயாவின், வைரமாலையைவிட விலை மதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்ற முற்ற, செங்கோடனின் குழந்தைகளின் ஆவலும், சச்சரவும், பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமோ ‘அப்பீல்’ செய்வதும், ஓங்கி வளரலாயிற்று. “எப்போது பழமாகும்?” – என்று கேட்பாள் பெண். எத்தனை நாளைக்கு மரத்திலேயே இருப்பது, என்று கேட்பான் பையன். செங்கோடன், பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தரவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். உழைப்பின் விளைவு! முழுப்பலனை நாம் பெறப் போகிறோம் – இடையே தரகர் இல்லை – முக்காலே மூன்று வீசம் பாகத்தைப் பறித்துக் கொள்ளும், முதலாளி இல்லை. உழைப்பு நம்முடையது என்றாலும் உடைமை பண்ணையாருடையது – அவர் எடுத்துக் கொண்டதுபோக மீதம்தானே நமக்கு என்று, வயலில் விளையும் செந்நெல்லைப்பற்றி எண்ண வேண்டும் – அதுதானே முறை! ஆனால் இந்தச் செவ்வாழை அப்படி அல்ல! உழைப்பும் உடைமையும் செங்கோடனுக்கே சொந்தம்!!

இரண்டு நாளையில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான் – பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால். மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் ‘சேதி’ பறந்தது – பழம் தரவேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, ‘அச்சாரம்’ கொடுத்தனர், பல குழந்தைகள், கரியனிடம்.

பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப்போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப் பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும். செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே, நூற்றுக்கு ஒரு பாகம்கூட இராது – ஆனால் உழைப்பு நம்முடையதாகவும் வயல் அவருடைய உடைமையாகவும் இருந்ததால், பலனை அவர் அனுபவிக்கிறார் பெரும் பகுதி. இதோ இந்தச் செவ்வாழை நம்ம கொல்லையிலே நாம் உழைத்து வளர்த்தது – எனவே பலன் நமக்குக் கிடைக்கிறது – இதுபோல், நாம் உழைத்துப் பிழைக்க நம்முடையது என்று ஒரு துண்டு வயல் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும். அப்படி ஒரு காலம் வருமா! உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம் – பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக்கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா! என்றெல்லாம்கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான். செவ்வாழை இதுபோன்ற சித்தாந்தங்களைக் கிளறிவிட்டது அவன் மனதில். குழந்தைகளுக்கோ நாக்கிலே நீர் ஊறலாயிற்று.

செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர், தமது மருமகப்பெண் முத்துவிஜயாவின் பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை செய்வதற்காக, ‘ஐயரிடம்’ சொல்லிவிட்டார். கணக்கப்பிள்ளையைக் கூப்பிட்டு, ‘பட்டி’ தயாரிக்கச் சொன்னார். பல பண்டங்களைப் பற்றிக் குறிப்பு எழுதும்போது, ‘பழம்’ தேவை என்று தோன்றாமலிருக்குமா? இரண்டு சீப்பு வாழைப்பழம் – என்றார் பண்ணையார்.

“ஏனுங்க பழம் – கடையிலே நல்ல பழமே இல்லை – பச்சை நாடாத்தான் இருக்கு” என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.

“சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்? – வேறே நல்ல பழம் எங்கே இருக்கு!” என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரம், “நம்ம செங்கோடன் கொல்லையிலே, தரமா, ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க – அதைக் கொண்டுகிட்டு வரலாம்” என்றான். சரி, என்றார் பண்ணையார்!!

செங்கோடனின் செவ்வாழைக்குலை! அவனுடைய இன்பக் கனவு!! உழைப்பின் விளைவு!! குழந்தைகளின் குதூகலம்!!

அதற்கு மரண ஓலை தயாரித்துவிட்டான் சுந்தரம்!

எத்தனையோ பகல் பார்த்துப் பார்த்து, செங்கோடனின் குடும்பம் பூராவும் பூரித்தது அந்தக் குலையை! அதற்குக் கொலைகாரனானான் சுந்தரம். மகிழ்ச்சி, பெருமை, நம்பிக்கை, இவைகளைத் தந்து வந்த, அந்தச் செவ்வாழைக் குலைக்கு வந்தது ஆபத்து.

தெருவிலே, சுந்தரமும் செங்கோடனும் பேசும்போது குழந்தைகள், செவ்வாழையைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணவே இல்லை! செங்கோடனுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றிற்று – நாக்குக் குழறிற்று – வார்த்தைகள் குபுகுபுவென்று கிளம்பி, தொண்டையில் சிக்கிக் கொண்டன.

மாட்டுப் பெண்ணுக்குப் பிறந்தநாள் பூஜை – என்று காரணம் காட்டினான் சுந்தரம். என்ன செய்வான் செங்கோடன்! என்ன சொல்வான்? அவன் உள்ளத்திலே, வாழையோடு சேர்ந்து வளர்ந்த ஆசை – அவன் குழந்தைகளின் நாக்கில் நீர் ஊறச் செய்த ஆசை – இன்று, நாளை, என்று நாள் பார்த்துக் கொண்டிருந்த ஆவல் – எனும் எதைத்தான் சொல்ல முடியும்? கேட்பவர் பண்ணை பரந்தாமர்! எவ்வளவு அல்பனடா, வாழைக்குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்டனுப்பினால் முடியாது என்று சொல்லிவிட்டாயே! அவருடைய உப்பைத் தின்று பிழைக்கிறவனுக்கு, இவ்வளவு நன்றி கெட்டதனமா? கேவலம் ஒரு வாழைக்குலை! அவருடைய அந்தஸ்த்துக்கு, இது ஒரு பிரமாதமா – என்று ஊர் ஏசுகிறதுபோல், அவன் கண்களுக்குத் தெரிகிறது.

அப்பா! ஆசை காட்டி மோசம் செய்யாதே! நான்கூடத்தான் தண்ணீர் பாய்ச்சினேன். மாடு மிதித்துவிடாதபடி பாதுகாத்தேன் – செவ்வாழை ரொம்ப ருசியாக இருக்கும். கல்கண்டுபோல் இருக்கும் என்று நீதானே என்னிடம் சொன்னாய். அப்பா தங்கச்சிக்குக்கூட, ‘உசிர்’ அந்தப் பழத்திடம். மரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே, நாக்கிலே நீர் ஊறும். எங்களுக்குத் தருவதாக சொல்லிவிட்டு, இப்போது ஏமாற்றுகிறாயே. நாங்கள் என்னப்பா உன்னை, கடையிலே காசு போட்டுத் திராட்சை, கமலாவா வாங்கி தரச்சொன்னோம். நம்ம கொல்லையிலே நாம் வளர்த்ததல்லவா! என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், குழந்தைகளை தவிக்கச் செய்கிறாயே, நியாயமா, என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும், அவன் மனக்கண்களுக்குத் தெரிந்தனர்! எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை! அரிவாள் இருக்குமிடம் சென்றான், ‘அப்பா, குலையை வெட்டப்போறாரு செவ்வாழைக்குலை – என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு குழந்தைகள் கூத்தாடின, செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின! குலையை வெட்டினான் – உள்ளே கொண்டு வந்தான் – அரிவாளைக் கீழேபோட்டான் – குலையைக் கீழே வை அப்பா தொட்டுப் பார்க்கலாம், என்று குதித்தன குழந்தைகள். கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன். “கண்ணு! இந்தக் குலை, நம்ம ஆண்டைக்கு வேணுமாம் – கொண்டு போகிறேன் – அழாதிங்க – இன்னும் ஒரு மாசத்திலே, பக்கத்துக் கண்ணு மரமாகிக் குலை தள்ளும், அதை உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்துவிடறேன் என்று கூறிக்கொண்டே, வீட்டைவிட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல், மனதைப் பிளப்பதற்குள்.

செங்கோடன் குடிசை அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று. இரவு நெடுநேரத்திற்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்குவர! அழுது அலுத்துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான், அவன் கண்களிலே, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்பிற்று. துடைத்துக்கொண்டு, படுத்துப் புறண்டான் – அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள். செவ்வாழையை, செல்லப்பிள்ளைபோல் வளர்த்து, என்னபலன்…!

அவருக்கு அது ஒரு பிரமாதமல்ல – ஆயிரம் குலைகளையும் அவர் நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும்! ஆனால் செங்கோடனுக்கு…? அந்த ஒரு குலையைக்காண அவன் எவ்வளவு பாடுபட்டான் – எத்தனை இரவு அதைப்பற்றி இன்பமான கனவுகள் – எத்தனை ஆயிரம் தடவை, குழந்தைகளுக்கு ஆசைகாட்டியிருப்பான்! உழைப்பு எவ்வளவு! அக்கரை எத்துணை! எல்லாம் ஒரு நொடியில் அழிந்தன!!

நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே, ஒரு சீப்பு செவ்வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு, அன்னநடை நடந்து அழகுமுத்துவிஜயா, அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.

நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தைகளின் குமுறல் ஓயவில்லை. கரியன் ஒரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, பழங்கலத்திலிருந்து ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள், பழம் வாங்கிக் கொள்ளச் சொல்லி, பறந்தோடினான், கரியன்.

கடையிலே, செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை, பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பு, முதலிலேயே தீர்த்துவிட்டான் – அவன் விற்றான் கடைக்காரனுக்கு – அதன் எதிரே, ஏக்கத்துடன் நின்றான் கரியன்! “பழம், ஒரு அணாடா, பயலே – காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமோ – போடா” என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலுவீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள், அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்கும் என்று! பழம் இருக்கிறது, கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான், வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக்கொண்டே. செங்கோடன், கொல்லைப்புறத்திலிருந்து வெளியே வந்தான் – வாழை மரத்துண்டுடன்.

“ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?” என்று கேட்டான் கரியன்.

“இல்லேடா, கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா – அந்தப் பாடையிலே கட்ட” என்றான் செங்கோடன்.

அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் துண்டு!

பாடையைச் சுற்றி அழுகுரல்!

கரியனும், மற்றக் குழந்தைகளும், பின்பக்கம்.

கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான் “எங்க வீட்டுச் செவ்வாழைடா” என்று.

“எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக் குலையைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்துவிட்டோம் – மரத்தை வெட்டி ‘பாடை’யிலே கட்டிவிட்டோம்” என்றான் கரியன்.

பாபம்! சிறுவன்தானே!! அவன் என்ன கண்டான், செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வசாதாரணச் சம்பவம் என்பதை.

Share this post:

சிறுகதை: சர்ஜன் வாசுக்குட்டி – இராஜாஜி

பக்த சிரோமணியாக ஊரில் பெயரெடுத்த கோபாலையருடைய துக்கம் தாங்க முடியாத நிலையை அடைந்தது. அதன் காரணம் அவருடைய தெய்வ பக்தியெல்லாம் அடங்காத கோபமாக மாறிவிட்டது. வீட்டிலிருந்த சாமி படங்கள் அத்தனையையும் கண்ணாடிச் சட்டங்களுடன் சுக்குநூறாக்கி வீதியில் குப்பைத் தொட்டியில் போட்டார். “வேண்டாம்! வேண்டாம்; மகா பாவம்!” என்று மனைவி கதறினாள். “தெய்வமும் இல்லை, ஒன்றும் இல்லை” என்று மனைவியை அதட்டிப் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமத்தைக் கிணற்றில் போட்டார். துக்கம் உன்மத்தமாயிற்று. வெகு நாள்கள் வரையில் பைத்தியமாக நடந்து கொண்டார்.

இந்தக் கதையை முதலிலிருந்து சொல்கிறேன். ஆஸ்தீக நாஸ்தீக வாதங்கள் மிகப் பழைய சமாசாரம். அந்த சர்ச்சைக்கு முடிவேயில்லை. இரு தரப்பிலும் உண்மையைக் கண்டவர்கள் இல்லை. உண்மையைக் காணாதவர் இடும் வாதத்துக்கு முடிவு ஏது? அவரவர்கள் அனுபவத்தின் பயனாக உணர்ச்சிகள் உண்டாகின்றன. அந்த உணர்ச்சிகளே வாதங்களாகின்றன. வாதத்துக்கும் முடிவு இல்லை. ஊருக்கும் வழியில்லை.

கோபாலையருக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை. ஒரே ஒரு பெண் குழந்தை. ‘மங்களம்’ என்று அதற்குப் பெயரிட்டு, மிகவும் பிரியமாகத் தகப்பனாரும் தாயாரும் வளர்த்தார்கள். பதினாறு வயதாயிற்று.

“மங்களம்! எனக்கு அந்தச் சாமிநாதனைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை; ஏதோ இன்ஜினியர் படித்துப் பாஸ் செய்திருக்கின்றான் என்று உன் அப்பா அவனை விரும்புகிறார். கன்னங்கறேலென்று ஒரு மாப்பிள்ளையைப் பிடித்தார் உன் அப்பா. எனக்கு நம்ம கிருஷ்ணமூர்த்திதான் பிடித்திருக்கிறது. என்ன சொல்கிறாய்? அவனும் கொஞ்சம் படித்துத்தான் இருக்கிறான். மேலும் படித்து இன்ஜினியரோ, டாக்டரோ அவனுந்தான் படிப்பான். லஷணமாய் இருக்கிறான். அவனை விட்டு இந்தக் கறுப்பனையா நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்?” என்றாள் கமலம்மாள்.

துணி கிழிந்திருந்ததை மங்களம் உட்கார்ந்து தைத்துக் கொண்டிருந்தாள். “இவனும் வேண்டாம், அவனும் வேண்டாம், அம்மா! என்னைத் தொந்தரவு படுத்தாதே” என்றாள் மங்களம்.

இவ்வாறு தினமும் மாறி மாறிப் பேச்சும் விவாதமும் நடந்தன. முடிவில் மங்களத்தைச் சாமிநாதனுக்கும் கொடுக்கவில்லை, கிருஷ்ணமூர்த்திக்கும் கொடுக்கவில்லை. கமலம்மாளுக்கு ஓர் அண்ணன்; சொந்த அண்ணன் இல்லை – தகப்பனாரின் முதல் தாரத்து வயிற்றில் பிறந்த மகன். அவனுடைய மகன் வாசு; மங்களத்துடன் குழந்தைப்பருவம் முதல் கூடி விளையாடி வந்த பையன். “வாசுவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்” என்று மங்களம் பிடிவாதம் பிடித்தாள். தகப்பனாரும் ஒப்புக் கொண்டார். சோதிடர்களும் இது ரொம்ப நல்ல ஜோடி என்றார்கள்.

மங்களத்தை வாசுதேவனுக்குக் கொடுத்துத் திருப்பதியில் விவாக முகூர்த்தம் சுருக்கமாக நடந்தது.


வாசுவும் மங்களமும் ஒரு வருஷம் கோபாலையர் வீட்டிலேயே சந்தோஷமாக வாழ்ந்தார்கள். அடுத்த வருஷம் சித்திரை மாதத்தில் மணலூரில் நடந்த பெரிய ரெயில் விபத்தில் வாசு உயிர் நீத்தான். அது காரணமாகத்தான் கோபாலையர் நாஸ்திகராகி விட்டார்.

“மங்களம் என்று பெயர் வைத்தேனே; விதவையாய்ப் போனாயே!” என்று தாயார் குழந்தையைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

“நான் செய்த பூஜை எல்லாம் பொய்யாகி விட்டதே! ஏற்றிய கற்பூரம் பிசாசுக்காயிற்றே! தெய்வமும் இல்லை, தேவியுமில்லை; எல்லாம் பொய்!” என்றார் கோபாலையர். மூன்று மாதங்கள் முழுப் பைத்தியமாகவே நடந்து கொண்டார்.

“விவாகம் ஆனபோது மங்களம் சாதாரணப் படிப்புத்தான் படித்து முடித்திருந்தாள். விபத்துக்குப் பிறகு கோபாலையர் ஓரளவு சாந்தமடைந்தபின் மங்களத்தைப் பள்ளிக் கூடத்தில் மறுபடியும் சேர்த்தார். மங்களம் படிப்பில் நன்றாகத் தேறி வருஷம் தவறாமல் படிப்படியாக விருத்தியடைந்தாள். பத்து ஆண்டுகள் முடிந்து மங்களம் வைத்தியக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.

மங்களத்திற்கு இப்போது இருபத்தைந்து வயது. உயர்தர வகுப்பில் வைத்தியப் பரீட்சை தேறிவிட்டாள். வைத்தியக் கல்லூரியில் கூடப் படித்த பலபேர் அவளை மணந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். தாயாரும் கூட மறு விவாகத்துக்கு ஓரளவு சம்மதித்தாள். “சாஸ்திரமாவது? கடவுளாவது! அவள் இஷ்டம்” என்றார் தகப்பனார். வாசு இறந்தது முதல் கோபாலையருக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. மூட நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. ஆனபடியால் மங்களத்தின் மறுவிவாகத்திற்கு முற்றும் சம்மதித்தார்.

“அவள் இஷ்டம்” என்று தகப்பனார் சொன்னதைக் கேட்டு மங்களம் “எனக்கு விவாகம் வேண்டாம். பிரசவ விடுதி வைத்து என் படிப்பைச் சமூகப் பணியாக்கி அந்த விதத்தில் காலங்கழிப்பேன்” என்றாள்.

“சமூகப் பணியாவது, மடத்தனமாவது! பணம் சம்பாதிக்கப்பார்” என்றார் கோபாலையர். “அப்படியே” என்றாள் மங்களம் சிரித்துக் கொண்டு. “பிரசவ விடுதியில் நல்ல பணமும் உண்டு” என்றாள். தகப்பனாரும் இதற்கு ஒப்புக்கொண்டு வேண்டிய செலவுக்கெல்லாம் தாராளமாகப் பணம் தந்தார்.


இப்போது ‘மங்களம்மாள் பிரசவ விடுதி’யில் வருஷம் ஒன்றுக்கு ஐம்பது தாய்மார்கள், குழந்தைகள் பெற்றுச் சொஸ்தமடைந்து சந்தோஷமாகத் தத்தம் வீடுகளுக்குச் செல்கிறார்கள். வியாதியஸ்தர்கள் விடுதியில் முப்பது பேர் வரையில் எப்போதும் இருந்து வந்தார்கள். ‘இதுவல்லவோ வாழ்க்கை’ என்றாள் மங்களம்மாள் தன் தாயாரிடம். ‘மங்களம்மாள் பிரசவ விடுதி’ பெரிய புகழ்பெற்ற ஸ்தாபனமாகிவிட்டது. விடுதியில் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் மங்களம் தன் தாயார் கமலம்மாளிடம் காட்டிச் சந்தோஷப்படுவாள். வருமானமும் எதிர்பார்த்ததற்கு மேலாகவே வர ஆரம்பித்தது.

“நான் விதவையானேன் என்று பகவான் பேரில் கோபித்தீர்கள்; ஆண்டவன் சங்கற்பத்தை அறியாமல் நாம் என்ன என்னவோ செய்கிறோம்! எனக்கு எத்தனை குழந்தைகள் பார்த்தாயா?” என்பாள் மங்களம் தாயாரிடம். கமலம்மாளும் சந்தோஷமாகப் பிரசவ விடுதியில் சில்லறை வேலைகள் செய்து வந்தாள்.

கோபாலையர் மறுபடியும் ஸ்வாமி படங்களைச் சம்பாதித்து வீட்டில் சுவரில் மாட்டிப் பூஜை செய்ய ஆரம்பித்தார். திருப்பதிக் கோவிலுக்கு வருஷம் தவறாமல் மனைவியுடன் போய் வந்தார். “கோவிந்தா! உன்னைத் திட்டினேன், கிணற்றில் போட்டேன். நீ சினம் கொள்ளாமல் காத்தாய்” என்று கூறிப் பிரகாரமும் சுற்றி உருண்டு சேவை செய்து வந்தார். சுந்தர காண்டம் பாராயணம் செய்யலானார்.

தகப்பன் யார் என்று இல்லாத ஒரு குழந்தை, விடுதியில் பிறந்தது. ஓர் அனாதைப் பெண், விடுதிக்கு வந்து அந்தக் குழந்தையைப் பெற்றாள். “இந்தக் குஞ்சை  நீ எடுத்து வளர்த்துக்கொள், டாக்டர் அம்மா! உனக்குக் குழந்தை இல்லையாமே!” என்றாள் அந்த அனாதை ஸ்திரீ தைரியமாக.

“நான் மூன்று குழந்தைகளைக் கொன்ற பாவி. அந்தப் பாவம் தீரும், அம்மா, நீ இதை வளர்த்தாயானால்” என்று அந்த அநாதை கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

குழந்தை அழகாக இருந்தது; மங்களத்தின் முகத்தை நோக்கிச் சிரித்தது. “என்ன சொல்கிறாய் அம்மா?” என்று மங்களம், தன் தாயார் கமலம்மாளைக் கேட்டாள்.

“என்ன சாதியோ, என்ன குலமோ, ஒன்றும் தெரியாமல் இதை எப்படி எடுத்துக் கொள்வது?” என்றாள்.

அப்போதுதான் கோபாலையர் திருப்பதியிலிருந்து திரும்பி வந்தவர், “சாதியாவது, குலமாவது? கோவிந்தனுக்கு ஒரே குலம். இன்று அவன் எனக்குப் பிரசன்னமாகி, ‘உனக்கு ஒரு பேரனைக் கொடுக்கிறேன்; வைத்து வளர்த்துக்கொள்’ என்றான். அவன் சொன்னது நடந்துவிட்டது!” என்று குழந்தையை எடுத்து மகளிடம் தந்தார்.

“இது பிராமணக் குழந்தைதான். முகத்தைப் பார்” என்றாள் கமலம்மாள்.

“எந்தக் குலமானால் என்ன? அப்பா எடுத்துக் கொடுத்தால் போதும்” என்றாள் மங்களம்.

அந்தக் குழந்தைதான் இப்போது வாசுக்குட்டி என்கிற பெயர்போன ரணசிகிச்சை வைத்தியர்.

Share this post:

சிறுகதைச் செல்வம் (துணைப்பாட நூல்) – 1993 (ஆறாம் வகுப்பு)

சிறுகதை செல்வம் என்ற துணைப்பாடநூல் பதினைந்து ஆசிரியர்களால் எழுதப்பட்ட பதினைந்து நூல்களிலிருந்து எடுக்கப்பட்டு உருவான கதைத் தொகுப்பு ஆகும். ஆறாம் வகுப்பு மாணவர்கள் படித்துப் பயன்பெறத்தக்க வகையில் கதைகள் தேர்ந்தெடுக்கப் பெற்றுச் செம்மையான வடிவில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

மரபு வழியில் நாம் போற்றிப் பாதுகாக்கும் பண்பாடுகளாகிய குருபக்தி, நேர்மை முதலானவற்றை மாணாக்கர்கட்கு வளர்க்கின்ற வகையில் சில கதைகள் அமைந்துள்ளன. நடைமுறை வாழ்விற்கேற்ப நட்பு கொள்ளும் முறை, பிற உயிர்களைப் பேணும் எண்ணம் ஆகியவற்றை உணர்ந்து ஏற்கின்ற முறையில் வேறு சில கதைகள் அமைந்துள்ளன.

இன்றையச் சூழலுக்குத் தேவையான அறிவுரைகளை உணர்த்தும் கதைகளும் உலகப் பொதுநோக்கில் காக்க வேண்டிய பண்பாடுகளை உணர்த்தும் கதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மாணாக்கர் ஆளுமையை வளர்த்து மேன்மையடையும் வகையில் வாழ்க்கைக்கு வழிகாட்டியான பல நல்ல பண்புகளையும் உயர் எண்ணங்களையும் வளர்க்க இக்கதைகள் பயன்படும் என்பது உறுதி.

பொருளடக்கம்

1. நல்ல அரசர்

2. வேண்டாதவர் நட்பு

3. உயர்ந்த உள்ளம்

4. போரை வெறுத்தவன்

5. பெயரில் என்ன இருக்கிறது?

6. நீதிக்கு உறவு இல்லை

7. தில்லியில் தென்னகத்தின் புகழ்

8. பசுவின் கண்ணீர்

9. கல்வியே சிறந்த செல்வம்

10. பொறுமையால் கண்ட உண்மை

11. நேர்மை அழிவதில்லை

12. வீடு நிறைந்த விளக்கு

13. முள்மரம் 

14. விறகு வெட்டியும்  வனதேவதையும்

15. தண்ணீரைப் பிளந்த தம்பி

Share this post:

சிறுகதை: தண்ணீரைப் பிளந்த தம்பி – நடராசன்

உண்மையான குருபக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தண்ணீரைப் பிளந்து கொண்டுவந்த தம்பியின் கதையை உதாரணமாகக் கூறலாம்.

பாரதநாட்டில் பழங்காலத்தில் எல்லாம் குருகுலக் கல்வி முறையே நடைபெற்றது.

ஒரு குருவின் கீழ்ப் பல மாணவர்கள் ஒன்றாகக் கல்வி பயின்றார்கள்.

கல்வி பயின்று முடிக்கும் வரை அவர்கள் குருவுடனேயே தங்குவார்கள்.

குருவுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வார்கள்.

குரு சொன்னபடி கேட்டு நடப்பார்கள்.

குருவும் அவர்களுக்குச் சற்றும் சந்தேகமில்லாதபடி சகல சாத்திரங்களையும் வித்தைகளையும் கற்றுக் கொடுப்பார்.

‘தௌமியர்’ என்ற குருவிடம் பல மாணவர்கள் ஒரு சமயம் கல்வி பயின்று வந்தார்கள்.

மாணவர்கள் எல்லாரும் அரசகுமாரர்கள்.

அரச குமாரர்களாக இருந்தபோதிலும் அவர்கள் ஆசிரியர் சொற்படி கேட்டு நடந்தார்கள்.

ஒருநாள் குருநாதர் அரசகுமாரனை நோக்கி, நமது வயலில் தண்ணீர் பெருகிப் பயிரை அழிக்கின்றது. ஆதலால், நீ வயலுக்குச் சென்று மடையை அடைத்து விட்டுவா என்று கட்டளையிட்டார்.

குருநாதர் கட்டளையிட்டவுடன் அந்த அரசகுமாரனும், மண்வெட்டியைத் தோளில் மாட்டிக் கொண்டு மடையை அடைக்கச் சென்றான்.

ஆனால் வயதில் சிறியவனான அந்த அரசகுமாரனால் மடையை அடைக்க முடியவில்லை.

மண்ணையும், கல்லையும் வாரிப் போட்டுப் பார்த்தான்.

ஆனால் மடையை மீறித் தண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

காலையில் மடையை அடைக்கச் சென்றவன் மாலைவரை வேலை செய்தான்.

ஆனால் அவனால் மடையை அடைக்கவே முடியவில்லை.

குருநாதர் சொன்ன வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே என்ன செய்வது? என்று அவன் கவலைப் பட்டான்.

மண்ணை வெட்டிப் போடுவதற்குப் பதிலாக மடையின் குறுக்கே தானே படுத்துக் கொண்டான்.

சிறந்த குருபக்தி கொண்ட அவனை மீறித் தண்ணீர் பாய்ந்துவரப் பயந்து அப்படியே அடங்கிவிட்டது.

காலையில் மடையை அடைக்கச் சென்ற மாணவன் மாலை ஆகி இரவு வரத் தொடங்கிய போதும் திரும்பி வரவில்லையே? என்று எண்ணினார் குருநாதர்.

மாணவர்கள் புடைசூழக் கையில் விளக்குடன் வயலுக்குச் சென்று பார்த்தார்.

அங்கே அவனுடைய குருபக்தியையும் அவனைத் தாண்டிவர அஞ்சி நிற்கும் தண்ணீரையும் கண்டு மகிழ்ந்தார்.

‘சீடனே! எழுந்து வா!’ என்று கூறினார்.

குருநாதர் கட்டளையைக் கேட்டவுடன் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு அந்தத் தம்பி எழுந்து வந்தான்.

குருவுக்கு வணக்கம் செலுத்தி நடந்ததையெல்லாம் கூறினான்.

உண்மையான குருபக்தி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!

(திரு. எஸ். நடராசன் அவர்கள் எழுதிய, “விளையாட்டுக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இக்கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

சிறுகதை: விறகுவெட்டியும் வனதேவதையும் – கோவிந்தன்

ஒரு காட்டில் ஒரு விறகுவெட்டி ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அந்த மரம் ஓர் ஆற்றின் கரையில் இருந்தது. மரத்தை வெட்டும் போது கையில் இருந்த கோடாலி தவறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. ஆறு ரொம்ப ஆழமாய் இருந்தபடியால் தண்ணீருக்குள் இறங்கி அவனால் கோடாலியை எடுக்க முடியவில்லை. அதனால் கரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். அவனைப் பார்த்து இறக்கங்கொண்ட வனதேவதை அவன் முன்பு தோன்றி, “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டது.

கோடாலி தண்ணீருக்குள் விழுந்து விட்டதாகவும், அது கிடைக்காவிட்டால் தனக்குப் பிழைப்புக்கு வழி இல்லை என்றும் விறகுவெட்டி சொன்னான். வனதேவதை தண்ணீருக்குள் மூழ்கி ஒரு தங்கக் கோடாலியோடு வெளியே வந்தது; அதை விறகுவெட்டியிடம் கொடுத்தது. அவன் அதைப் பார்த்ததும் அது தன் கோடாலி அல்ல என்றும், அது தனக்கு வேண்டாம் என்றும் சொல்லி விட்டான். வனதேவதை மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கி ஒரு வெள்ளிக் கோடாலியை எடுத்து வந்து கொடுத்தது. அதுவும் தன்னுடையது அல்ல என்று சொல்லி விறகுவெட்டி மறுத்து விட்டான். வனதேவதை மூன்றாவது தடவையாகத் தண்ணீருக்குள் மூழ்கி விறகுவெட்டியின் கோடாலியை எடுத்து வந்து கொடுத்தது. அதைப் பார்த்ததும் விறகுவெட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இரண்டு கைகளாலும் அதை வாங்கிக் கொண்டான்.

விறகுவெட்டியின் நாணயத்தைப் பார்த்து வனதேவதை சந்தோஷங் கொண்டது. “நீ உண்மையாக நடந்து கொண்டபடியால் உன்னுடைய கோடாலியோடு இந்தத் தங்கக் கோடாலியையும், வெள்ளிக் கோடாலியையும் உனக்குப் பரிசாகக் கொடுக்கிறேன். எடுத்துக் கொள்” என்று வனதேவதை சொல்லிற்று.

மூன்று கோடாலிகளோடு விறகுவெட்டி வீடு திரும்பினான்; காட்டில் நடந்த அதிசயத்தை அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சொன்னான். இதைக் கேட்டவர்களில் ஒருவன் உடனே காட்டுக்குப் போனான்; விறகு வெட்டியின் கோடாலி தண்ணீருக்குள் விழுந்த இடத்தில் தனது கோடாலியைப் போட்டான்; கரையில் உட்கார்ந்து அழுதான்.

வனதேவதை வந்தது. காரணத்தைக் கேட்டது; தண்ணீரில் மூழ்கி ஒரு தங்கக் கோடாலியை எடுத்து வந்து காட்டியது. அதைப் பார்த்த பேராசைக்காரன் “ஆமாம் அதுதான்” என்று சொல்லிக் கொண்டே அதைக் கைப்பற்றப் போனான். உடனே தேவதை, “ஓ பேராசைக்காரனே, உன் உள்ளத்தை அறியக்கூடிய உன் தெய்வத்தையா ஏமாற்றப் பார்க்கிறாய்? உன்னுடைய கோடாலியைக் கூட உனக்குக் கொடுக்க முடியாது. ஓடிப்போ” என்று சொல்லியது.

பேராசைக்காரன் வெறுங்கையோடு வீடு திரும்பினான்.

“அதிக ஆசை கொண்டால் உள்ளதும் பறிபோகும்.”

(திரு. வை. கோவிந்தன் அவர்களால் தொகுக்கப்பட்ட “ஈசாப் குட்டிக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

சிறுகதை: முள்மரம் – திருச்சி வாசுதேவன்

சந்திரன் அவனுடைய பெற்றோருக்கு ஒரே மகன். அவன் தந்தை நன்கு கற்றவர்; பெரிய உத்தியோகத்திலும் இருந்தார். சந்திரன் தன்னுடைய தாய் அல்லது தந்தையுடன் வெளியில் அடிக்கடி போய்வருவான். அந்தச் சமயங்களில் கடைகளில் காணப்படும் விளையாட்டுப் பொருள்களையோ தின்பண்டங்களையோ வாங்கித் தரும்படி கேட்பான்.

தங்களிடம் செல்வம் இருக்கிறது என்பதாலோ சந்திரன் ஒரே பிள்ளை என்பதாலோ அவனுடைய பெற்றோர் அவன் விரும்பியதை வாங்கிக் கொடுத்துச் செல்லமாக வளர்த்து வந்தனர்.

முன்பெல்லாம் மாலையில் பள்ளியை விட்டு வந்ததும் பள்ளிப் பாடங்களைப் படிப்பான்; எழுதுவான். தனக்குத் தெரியாதவற்றைப் பெற்றோரிடம் கேட்டுக் கொள்வான். இப்போது அப்படியில்லை. மாலையில் வீட்டுக்கு வந்ததும் நண்பர்களுடன் விளையாடச் சென்று   வீடு திரும்பிய பின் சிறிது நேரமே கல்வியில் கவனம் செலுத்துவான்.

சிலசமயம் சந்திரனின் பள்ளி நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு சில பையன்கள் அவனைத் தேடி வர ஆரம்பித்தனர். இயல்பாகப் பள்ளிச் சிறுவர்களிடம் காணப்படும் இனிமையான முகத் தெளிவு அவர்களிடம் இல்லை. எனவே, சந்திரனின் தாய் அவனை அவர்களுடன் விளையாடச் செல்ல அனுமதிக்கவில்லை. என்றாலும் சாக்குப் போக்குகள் கூறி அவர்களுடன் சென்று விடுவான்.

சில மாதங்கள் சென்றன.

ஒரு விடுமுறை நாளில் சந்திரனின் தந்தை காலையில் எங்கோ வெளியில் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் சந்திரன், தன் நண்பன் ஒருவனைப் பார்த்து வருவதாகத் தாயிடம் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான். சென்றவன் நெடுநேரமாகியும் வரவில்லை.

வீட்டு வேலைகள் முடிந்த பிறகு சந்திரனின் தாய், வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் மலர்கள் கொய்யச் சென்றாள். அங்கே அடர்ந்திருந்த முல்லைக் கொடிகளின் அருகில், ஒரு சிறிய முள்மரமும் இருந்தது. அதை வெட்டியெறிய வேண்டுமென்று நினைத்தும் ஏதோ சோம்பலால் வெட்டியெறியவில்லை. சற்று உயரமான இடத்தில் அன்று முல்லையரும்புகள் நிறைய இருந்தன. அவற்றை அவள் எக்கி எக்கி முயன்று கொய்யும் போது அவளுடைய சேலைத் தலைப்பு, அருகில் இருந்த முள்மரக்கிளையில் சிக்கிக் கிழிந்து விட்டது.

உடனே அரிவாள் கொண்டு வந்து அந்த முள்மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினாள். அப்போது அவளுடைய கை கால்களில் முள்முனைகள் பட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

அன்றிரவு உணவு அருந்திய பின் சந்திரனின் பெற்றோர் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். சந்திரன் உண்டபிறகு தனது படுக்கைக்குச்சென்றுவிட்டான்.

அப்போது சந்திரனின் தந்தை முதல் நாள் இரவு தன் மணிப்பர்ஸில் நான்கு ஐந்து ரூபாய் நோட்டு வைத்திருந்ததாகவும், அன்று வெளியில் சென்றிருந்த போது பார்க்கையில் மூன்று நோட்டுகளே இருந்ததாகவும் தெரிவித்தார். அதைக் கேட்டதும் சந்திரனின் தாய் திடுக்கிட்டாள். பிறகு சிறிது யோசிப்பது போல் மௌனமாக இருந்துவிட்டு, “மன்னியுங்கள். இன்று எதிர்வீட்டிலிருந்து கமலா வந்து அவசரமாகக் கேட்டாள். எடுத்துக் கொடுத்தேன்; சொல்ல மறந்துவிட்டேன்!” என்றாள்.

பிறகு முள்மரத்தால் சேலைத் தலைப்புக் கிழிந்து போனதையும், அந்த மரத்தை வெட்டியெறிகையில் கைகளில் காயம் ஏற்பட்டதையும் விவரித்தாள். அவற்றைக் கேட்ட சந்திரனின் தந்தை, முள்செடியை ஆரம்பித்திலேயே களைந்து விட வேண்டும், அது முற்றி மரமானால் வெட்டுகிறவர் கைகளுக்குத் தீங்கு செய்யும் என்று திருக்குறள் கூறியபடிதான் நடந்துள்ளது என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் சந்திரனின் தாய் மிகவும் ஆச்சரியம் அடைந்தாள். அப்போது அவர்,

இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து!

என்னும் குறட்பாவைக் கூறியதுடன், சில உவமைகளும் சொன்னார். அதாவது பொய், களவு, சூது ஆகிய தீய பழக்கங்கள் முள்செடியைப் போன்றவை. அந்தப் பழக்கங்களை ஆரம்பத்திலேயே ஒழித்துவிட வேண்டும். இல்லையேல், அந்தப் பழக்கம் உள்ளவர்கள் தாங்களும் துன்பமடைவர்; அவர்களால் சமூகத்துக்கும் கேடு விளையும் என்று விளக்கினார்.

மறுநாள் காலை வழக்கம் போல் சந்திரனின் தந்தை அலுவலகம் சென்றுவிட்டார். அவர் சென்றதும் சந்திரன் தன் தாயிடம் வந்து நின்றான். முகத்தில் கலக்கம் இருந்தது. சரளமாகப் பேச முடியவில்லை. தாய் வற்புறுத்திக் கேட்கவே தயங்கிக் கொண்டே பேசினான்.

முதல் நாள் இரவு, அவளும் தந்தையும் பேசிக் கொண்டிருந்தவற்றைத் தான் கேட்டதாகவும், அது முதல் தனது நெஞ்சில் ஒரு சுமை ஏற்பட்டது என்றும் கூறினான். அதைக் கேட்டு அவள் மிகவும் ஆச்சரியம் அடைந்தாள்.

மேலும், சந்திரன் தன் சிநேகிதன் ஒருவனின் பேச்சைக் கேட்டு அப்பாவின் பர்ஸிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துச் சென்றிருக்கிறான் என்பதையறிந்ததும் மிகவும் வேதனைப்பட்டாள். தங்களுடைய ஒரே புதல்வன், தகாதவர்களின் நட்பினால், புத்திகெட்டு விட்டானே என்று எண்ணும் போது அவள் கண்கள் கலங்கின.

அந்த நிலையில் தன் தாயைக் கண்ட சந்திரனுக்கும் அழுகை வந்து விட்டது. ‘அம்மா அழாதே அம்மா! இனிமேல் எந்தத் தவறும் செய்யமாட்டேன், நீங்கள் முள்மரத்தை வெட்டியெறிந்த மாதிரி, நானும் அந்தப் பையன்களின் நட்பை வெட்டியெறிந்து விடுகிறேன்!’ என்றான் தேம்பிக்கொண்டே.

சந்திரனின் தாயுள்ளம் நெகிழ்ந்தது. தன் முன்றானையால் அவன் கண்களைத் துடைத்தாள். அப்போது அவனுக்கு வாழ்த்துக் கூறுவது போல அவளுடைய கண்ணீர் முத்துக்கள் அவன் தலையில் உதிர்ந்தன!

(கவிஞர் திருச்சி வாசுதேவன் அவர்கள் எழுதிய ‘பாலர் கதைகள்’ என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

சிறுகதை: வீடு நிறைந்த விளக்கு – எம்.பி.ஆர்

அத்தினப்புரத்தை ஆண்ட குருகுல அரசனான திருதராட்டிரன் மைந்தர் நூற்றுவரும், பாண்டு புத்திரர் தருமர் உள்ளிட்ட ஐவரும் துரோணாசாரியாரிடம் வில்வித்தை, வாள்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம் முதலிய அருங்கலைகளைக் கற்று வந்தனர்.

இவ்வாறு பயிலும் காலத்து, பாண்டு புத்திரனான அர்ச்சுனன் மற்றவர்களை விடப் பதின்மடங்கதிகமாக எல்லாக் கலைகளிலும் தேர்ச்சியுற்றிருந்தான். அதுகண்ட துரியோதனன் பாண்டு புத்திரர்களிடம் ஆசூயையும் பகைமையுங் கொண்டு, திருதராட்டிரனிடமும் பீஷ்மரிடமும் துரோணர் தங்களிடம் அசிரத்தையாயிருப்பதாகவும், வினோதக் கலைகளைப் பாண்டவருக்கே

கற்பிக்கிறார் என்றும் கூறி, அன்னவரை மனக்கிலேசமுறச் செய்தான். உடனே அவர்கள் துரோணரை அழைத்து வினவினார்கள். துரோணர், “மண்டலாதிபதிகளே! அனைவரையும் சமமாகப் பாவித்து, எல்லாக் கலைகளையும் அனைவர்க்கும் பாரபட்சமின்றிக் கற்பித்து வருகின்றேன். அவரவர்களுடைய அறிவுக்கேற்றாற்போலக் கலைகளும் வளர்ச்சி அடைகின்றன. இன்னும் ஏதேனும் கிஞ்சித்து ஐயமிருந்தாலும் நூற்றைவரையும் பரீட்சித்துப் பாருங்கள்” என்று கூறித் தம் குடில் ஏகினார். 

பின்பு திருதராட்டிரனும் பீஷ்மரும் அமைச்சருடன் ஆலோசித்துத் துரியோதனாதியரை அழைத்தனர். அவர்களிடம் சிறிது பொருள் தந்து, “இந்தப் பொருளைக் கொண்டு வீடு நிறைந்த பொருளை வாங்கி வையுங்கள்” என்று கூறி அனுப்பினர். அதுபோலவே பாண்டவரிடமும் பொருள் தந்து, “நீவிர் ஐவீரும் இப்பொருளின் உதவியினால் வீடு நிறைந்த பொருள்களை வாங்கி வையுங்கள்” என்று சொல்லி அனுப்பினர்.

பாண்டு மைந்தரில் மூத்தவரான தருமர் தம் சகோதரருடன் கலந்தாலோசித்தார். பின்பு தந்தை தந்த பொருளில் அருச்சுனனிடம் சிறிது தந்து, “அருச்சுனா, வீடு நிறைந்த பொருள்களை வாங்கி வைக்குமாறு நம் தந்தை கூறியிருக்கின்றார். அதனால் நீ பன்னீர், சந்தனம், பூ முதலிய வாசனைப் பொருள்களையும், தாம்பூலம், பால், பழம் முதலியவற்றையும் வாங்கிக் கொண்டு வா” என்று கட்டளையிட்டார்; வீமனிடமும் சிறிது பொருள் தந்து அவனை நோக்கி, “வீமா, நீ இப்பொருளைக் கொண்டு அறுசுவையுள்ள பதார்த்தங்களுடன் அன்னம் தயாரிக்க வேண்டும்” என்று பணித்தார்; சகாதேவனைப் பார்த்து, “நம் தந்தையாரும் பீஷ்மரும் இங்கே வந்து விருந்துண்டு சிறிது நேரம் சிரமபரிகாரம் செய்து கொள்ளுவார்கள். அவ்வமயம் அவர்களுக்குப் பஞ்சணை தேவைப்படும். எனவே, சிறந்த வகையுள்ள மெத்தை முதலியவற்றை வாங்கிக் கொண்டு வா” என்று கூறி அவனிடமும் சிறிது பொருள் தந்தார்; பின்பு எஞ்சிய பொருளைக் கடைசி சகோதரனாகிய நகுலனிடம் தந்து, “நம் தந்தையாரும், பெரியவர் பீஷ்மரும் நம் குடிலுக்கு வரும்போது வீடு பிரகாசமாயும் அலங்காரமாயும் இருக்க வேண்டும். எனவே, ஆங்காங்கு விளக்குகள் ஒளிர்விட்டுப் பிரகாசிப்பதற்கேதுவான நெய், திரி முதலிய இன்றியமையாப் பொருள்களை வாங்கிக் கொண்டு வா” என்று கூறி அனுப்பினார்.

தமையனார் கட்டளைப்படி நான்கு தம்பியரும் அவரவர்க்குப் பணிக்கப்பட்ட பொருள்களை வாங்கி வீட்டில் வைத்து அவரவர்  கருமத்திலேயே கண்ணாயிருந்தனர். பின்பு தருமர் உள்ளிட்ட ஐவரும் மங்கள நீராடி, புத்தாடை தரித்து, வீட்டை அலங்கரித்து, திருவிளக்குகள் ஏற்றி, பெரியோர் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

திருதராட்டிரன் மதலையாகிய துரியோதனன், துச்சாதனன், தன் பின்னவருடன் அருமை நண்பன் கர்ணனுடனும், மாமன் சகுனியுடனும் இருந்து, தந்தை தந்த பொருளைக் கொண்டு எவ்விதமாக வீட்டை நிறைப்பது என்பது பற்றி ஆலோசனை செய்தான். சுவேத ராஜன் இளைய புத்திரனும், துரியோதனாதியரின் நல்லம்மானுமாகிய சகுனியும், கர்ணனும் கலந்தாலோசித்து, துரியோதனனைப் பார்த்து, “அன்புள்ள இளவரசே! வீடுநிறைந்த பொருள் வாங்குவதற்கு உன் தந்தை சிறிது திரவியத்தையே கொடுத்தார். அதைக் கொண்டு தந்தையின் அவாவைப் பூர்த்தி செய்வது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலாகும். எனவே, சிறிது திரவியத்தைக் கொண்டு வீடு நிறைந்த பொருள் வாங்க வேண்டுமென்றால், வைக்கோல் வாங்கினால் திரவியத்துக்குத் தகுந்த பொருளாகவும் இருக்கும்; வீடு நிறைந்த பொருளாகவும் இருக்கும்” என்று கூறி, இளவரசன் முகம் நோக்கி ஆவலுடன் இருந்தனர்.

அம்மான் மொழிகளைச் செவியேற்ற துரியோதனன் அகமகிழ்ந்தான். “மாமா, அவ்வப்போது சூழ்நிலைக்கும் சமயத்திற்கும் ஏற்றாற்போல அறிவுரை கூறுபவர் உம்மைத் தவிர இவ்வுலகில் வேறு யாருமில்லை. உம்மைப் போன்றும் பாண்டவருக்கு அறிவுரை கூறுபவர் ஒருவரும் இல்லை. இது பற்றி நான் மிகவும் ஆனந்தம் கொள்ளுகின்றேன், உம் வார்த்தையின் படியே வைக்கோல் வாங்கி நிரப்புகின்றேன்” என்று மொழிந்து, வைக்கோல் வாங்கி வீடு நிறைய அடைத்தான்; தன்னுடைய செயல் பாண்டவருக்குத் தெரிந்தால் அவர்களும் தான் செய்ததையே செய்வார்கள் என்னும் கெட்ட எண்ணம் கொண்டவனாய், வீட்டின் கதவுகளைத் தாளிட்டான்; வாயிலின் வெளியிலேயே தன் தம்பியருடன் தந்தையின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

தான் வாக்களித்த வண்ணம், திருதராட்டிரன் பீஷ்மருடனும், அமைச்சருடனும் முதலில் துரியோதனனிடம் சென்றான். தந்தையின் வருகையைக் கண்ட தனயன் எதிர் கொண்டு அழைத்தான். திருதராஷ்டிரன் மைந்தனைப் பார்த்து, “நான் சொல்லியபடி வீடு நிறையப் பொருள்களை வாங்கி வைத்திருக்கிறாயா?” என்று ஆவலுடன் கேட்டான்.

துரியோதனன் மிக்க பணிவுடன், “நீர் கட்டளையிட்ட வண்ணம் வீடு நிறைந்த பொருளை வாங்கி வைத்திருக்கின்றேன், வைக்கோலைத் தவிர வீடு நிறைந்த பொருள் வேறொன்றும் இல்லை. ஆகையினால் வாயிற்கதவைத் திறப்பதற்குக் கூட இடமில்லாமல் வீடு நிறைய வைக்கோலை அடைத்து வைத்திருக்கின்றேன்” என்று மிகவும் அகம்பாவத்துடன் சொன்னான். அவன் மொழி கேட்ட பீஷ்மர் உள்ளிட்டோர் அனைவரும் மனம் மிக வெதும்பினர்; வீட்டின் உள்ளே செல்வதற்கு இயலாமல் அவ்விடத்தினின்றும் அகன்று, பாண்டவர் இல்லம் சென்றனர்.

பாண்டவர் ஐவரும் பெரியோரை ஆவலுடன் இன்முகங்கொண்டு வரவேற்று, தம் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றனர்; தக்க ஆசனங்களில் அவர்களை இருக்கச் செய்து அஞ்சலி செய்தனர். வீடு நன்றாக அலங்கரிக்கப்பட்டிருப்பதையும், சோதி மயமாக விளக்குகள் பிரகாசிப்பதையுங் கண்ட பீஷ்மர் அகம் மகிழ்ந்து, தருமரை நோக்கி, “மைந்தனே! வீடு நிறையும்படியாக என்ன பொருளை நீ வாங்கி நிறைத்துள்ளாய்?” என்று கேட்டார்.

தருமர், “உலகிற்கு இன்றியமையாதது ஒளி. பிரகாசமான ஒளி உலகத்தின் எல்லா இடங்களிலும் வியாபிக்கும் பொருள். எனவே, வீடு நிறைந்த பொருள் திருவிளக்குகளேயன்றி வேறொரு பொருளும் இல்லை என்பது எங்கள் அபிப்பிராயம். எமது குடிலுக்கு வருகிற உமக்கு விருந்தளிக்காமல் அனுப்புவது தகுதியல்லவென்று எண்ணி, எங்களால் முயன்ற வரையில் அறுசுவைப் பதார்த்தங்களுடன் நல்லன்னம் தயாரித்துள்ளோம். எனவே, அனைவரும் இங்கு விருந்துண்டு சிரம பரிகாரம் செய்து கொள்ள வேண்டுகின்றோம்” என்று பணிவுடன் கூறினார்.

தருமரின் வேண்டுதலை நிராகரிக்க மனமில்லாத திருதராட்டிரன், பீஷ்மர் முதலியோர் சந்தோஷம் அடைந்து, அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். அறுசுவைப் பதார்த்தங்களுடன் கூடிய அன்னம் பரிமாறப்பட்டது. பின்பு விருந்துண்ட பெரியோருக்கு இனிப்பு மிக்க, பழ வகைகளையும், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகிய  இன்னோரன்ன வாசனைப் பொருள்களையும் அர்ச்சுனன் கொண்டு வந்து வைத்தான்.

பீஷ்மரின், திருதராட்டிரன், அமைச்சர் முதலியோர் மாலை, சந்தனம் முதலியவற்றை அணிந்து, தாம்பூலம் தரித்தனர்; பிறகு சிறிது நேரம் பஞ்சணைகளில் சிரமபரிகாரம் செய்து கொண்டனர்; பாண்டு மைந்தரின் அறிவாற்றலையும் தெரிந்து தெளிவுறச் செயல்படுவதையும் கண்டு அவர்களைப் புகழ்ந்து நல்லாசி கூறி, பிரியா விடைபெற்று, அரண்மனைக்குச் சென்றனர்.

(திரு. எம்.பி.ஆர். அவர்கள் எழுதிய “வள்ளுவரின் குறள் நெறிக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இக்கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

சிறுகதை: நேர்மை அழிவதில்லை – இராகவேந்திரர்

தாம் விற்கும் பொருளுக்கு எவ்வளவு அதிகமான விலை கூற முடியுமோ அவ்வளவு அதிகமான விலையைச் சற்றும் சங்கோசமில்லாமல் கூறுபவரைத் திருடர் என்று கூறாமல் வேறு என்ன கூறுவது?

– அண்ணல் காந்தியடிகள்

தேனாட்சி நடத்தும் மீனாட்சி அம்மனின் ஆலயமும், குன்றெங்கும் குடியிருக்கும் குமரக்கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவதுமான திருப்பரங்குன்றமும், பழமுதிர்ச்சோலையும் அருகருகே கொண்டுள்ள அழகான மாவட்டம் தான் மதுரை.

சிறப்பிற்குரிய அம் மாவட்டத்தில் ஆலம்பட்டி என்ற கிராமம் இருந்தது. அதில் அழகர்சாமி என்பவன் வாழ்ந்து வந்தான். அடக்கமே உருவானவன். அளந்துதான் பேசுவான். மற்றவர் மனம் புண்படும் விதத்தில் எதையும் செய்ய மாட்டான்.

அவனுடைய மனைவியும் அவனுக்கு ஏற்பவே அமைந்திருந்தாள்.  அன்பிற்கு ஒன்று போதும் என்று உணர்ந்து பெற்ற தன் மகனை நல்ல நிலையில் படிக்கச் செய்தான்.

ஆடம்பரம் இல்லாத அளவில் மிகச் சிறிய மளிகைக் கடையை வைத்துக் கொண்டு அதன் மூலம் தன் குடும்பத்தினை நடத்தி வந்தான். அத்தியாவசியமான பொருள்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் டவுனில் இருந்து வாங்கி வந்து அவற்றை உரிய டப்பாக்களில் அடைத்து வியாபாரம் செய்தான்.

இலாபமும் வேண்டாம், அதே  நேரத்தில் நமக்கு நட்டமும் வேண்டாம் என்ற நிலையில் அவன் செய்த வியாபாரம் அக்கிராமத்து மக்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தது.

ஏழைகளுக்குச் சில நேரத்தில் வாங்கிய விலைக்குக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அவர்களுக்குப் பொருள்களை விற்பனை செய்வான்.

மாத வருமானம் உள்ளவர்களுக்குக் கடன் கொடுத்து அவற்றை அவர்கள் திருப்பித் தரும்போது  பெற்றுக் கொள்வான்.

நேர்மையாய் வியாபாரம் செய்யும் அவனுடைய கடைக்கு அக்கம்பக்கத்துச் சிற்றூர்களிலிருந்தும் பொருள்களை வாங்குவதற்காக வந்தார்கள். கூட்டம் நாளடைவில் அதிகமானது. வாடிக்கைக்காரர்களும் பெருகினர்.

முன்பெல்லாம் இரவு ஏழு மணிக்கே கடையினை மூடிவிடும் அழகர்சாமி இப்போதெல்லாம் ஒன்பது மணி ஆன பிறகும் மூடமுடியாத அளவிற்குக் கூட்டம்வர ஆரம்பித்தது.

வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு விடுவதற்குக் கூட முடியவில்லை. தான் ஒருவன் மட்டுமே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வது ரொம்பவும் கஷ்டமாய் இருந்தது.

பள்ளிக்கூடம் விட்டதும் அழகர்சாமியின் மகன் குருராஜன் நேராகக் கடைக்கு வந்துவிடுவான். தந்தைக்கு உதவியாகக் கூடமாட உதவிபுரிவான்.

நாளடைவில் கடையைச் சற்றுப் பெரிய அளவில் கட்டினான் அழகர்சாமி.

ஏழ்மையான குடும்பத்தில் இருந்த ஒரு பையனைத் தன் கடையில் வேலைக்காக அமர்த்திக் கொண்டான். முதலாளியைப் போலவே பையனும் கடைக்கு வருவோரிடம் மரியாதையுடனும், மறந்தும் கடுமையான வார்த்தைகளைப் பேசாமலும் நடந்து கொண்டான்.

அழகர்சாமி  கடையென்றால்  சுற்றுவட்டாரத்தில் அறியாதவர்களே இல்லை என்ற நிலைமை உருவானது. அப்படி இருந்தபோதும் அவனிடத்தில் ஆரம்பத்தில் காணப்பட்ட அடக்கமும், இனிய பேச்சும் கொஞ்சமும் மாறாமல் இருந்தது.

அதே ஆலம்பட்டி கிராமத்தில் கோடீஸ்வரன் என்பவன் வாழ்ந்து வந்தான். பெயருக்கு ஏற்பப் பண வசதியோ கொஞ்சமும் இல்லை. ஆனால் கர்வமும் பொய்மையும் அவனிடம் அதிகமாகவே காணப்பட்டன.

தான் உண்மையிலேயே கோடீஸ்வரனாக வேண்டும். அத்துடன் அழகர்சாமியினைப் போல் செல்வாக்கினையும் பெற வேண்டும் என்ற எண்ணம் அவனுள் விழுதூன்றி வளர ஆரம்பித்தது.

பத்து பைசா வட்டிக்குக் கொஞ்ச ரூபாயினைக் கடனாக வாங்கினான். சீதனமாய்த் தந்த மாமியாரின் நிலத்தை ஒன்றும் பாதியுமாய் விற்றான். அதைக் கொண்டு அழகர்சாமியின் கடைக்கு எதிர்ப்புறத்தில் இருந்த முடிவெட்டும் சலூன் கடைக்காரரிடம் சென்றான். அந்தக் கடையைத் தனக்கு  விட்டுவிட்டுத் தெரு முனையில் இருக்கும் காலி இடத்தில் முடிவெட்டும் கடையைக் கட்டிக் கொள்ளும்படி சொன்னான்.

சலூன் கடைக்காரர் அதற்கு முதலில் சம்மதம் தரவில்லை. பிறகு கோடீஸ்வரன் அவனுக்குச் சற்று அதிகமான பணத்தைத் தந்தான். ஒருவழியாக அவனும் சம்மதித்தான்.

தான் போட்ட முதல் திட்டம் வெற்றி அடைந்தது குறித்து சந்தோஷப்பட்டவன் அடுத்துச் செய்வதற்கான வேலையில் அக்கறையுடன் இறங்கினான்.

ஏனோ தானோ வென்று சுற்றிக்கொண்டிருந்த மருமகப் பிள்ளைக்குப் புத்தி வந்து விட்டதை எண்ணியபோது மாமியாரும் மாமனாரும் மகிழ்ந்து போனார்கள். தாம் சேமித்து வைத்திருந்த பணத்தோடு நிலத்தின் ஒரு பகுதியினை அடகு வைத்து, ஒரு கணிசமான தொகையை மாப்பிள்ளையிடம் கொடுத்து வியாபாரம் செய்து முன்னுக்கு வரும்படி வாழ்த்தியும் சென்றார்கள்.

தேடிவந்து உதவிபுரியும் அவர்களை நினைத்துப் பெருமைப் பட்டான். தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது, அதனால்தான் வலியவந்து உதவி செய்து விட்டுப் போகிறார்கள் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தான்.

கடையைப் பெரிய அளவில் கட்டினான். கவர்ச்சியான முறையில் கண்ணாடிப் பீரோக்களையும் மின்சார விளக்குகளையும் கடையின் முகப்பில் பொருத்தி ஜெகஜோதியாக இருக்கும்படி செய்தான்.

பணம் வாங்கிவைப்பதற்கு அழகான கல்லாப் பெட்டியொன்றையும், அதன் அருகில் தான் உட்காரும் இருக்கைக்கு மேலே மின்விசிறியையும் பொருத்தினான். வேலைக்கு ஆள்கள் தேவையென்று பெரிய அளவில் விளம்பரம் செய்து இரண்டு பையன்களை வேலையில் அமர்த்திக் கொண்டான்.

மாதச் சம்பளம், வேலை நேரம், வார விடுப்பு, தினப்படி, மாலை நேரத்தில் டீ, வருடத்தில் பொங்கல் திருநாளுக்குப் போனஸ் இன்னும் ஏராளமான சலுகைகளைத் தருவதாகச் சொன்னதும் நிறையப் பையன்கள் தாம் ஒழுங்காகச் செய்து கொண்டிருந்த வேலையைக்  கூட விட்டுவிட்டுக் கோட்டீஸ்வரன் கடைக்கு  வரத் துடித்தனர்.

கடையைத் திறப்பதற்காக ஒரு விழாவினையே ஏற்பாடு செய்திருந்தான். பெரிய பெரிய சுவரொட்டிகள் அந்த மதுரை மாவட்டத்தையே ஆக்கிரமித்துக் கொண்டன.

ஆளுங் கட்சி அரசியலைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரையும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும், சினிமா நடிகை ஒருத்தியையும், இரண்டு உள்ளூர்க்காரர்களையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தான்.

எல்லாரும் வந்திருந்தார்கள். கடைதிறப்பு விழாக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வந்திருந்தவர்கள் தங்களின் எண்ணங்களையெல்லாம் கொட்டிவிட்டுத் தத்தமக்கு அங்கொரு செல்வாக்கினை உருவாக்கிடும் வழியினையும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

எல்லாரும் போன பிறகு கடையில் கல்லாப் பெட்டியின் அருகில் மிடுக்காக அமர்ந்தான் கோட்டீஸ்வரன். அவனின் பார்வைகள் அனைத்தும் எதிர்புறத்திலுள்ள அழகர்சாமியின் கடைமீதே இருந்தன.

புதியதாகத் திறக்கப்பட்ட கடையென்பதால் சில சலுகைகளை அங்குப் பொருள்களை வாங்குவோருக்கு வழங்கினான். அப்பாவி மக்கள் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் அந்தக் கடையினையே சூழ ஆரம்பித்தார்கள். வியாபாரம் களை கட்டியது.

சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அங்கு வேலை செய்த பையன்களிடம் சொல்லி வந்தான். அதன்படி அவர்களும் கொடுக்கின்ற காசுக்குச் சற்று அதிகமாகவே பொருள்களை வழங்கினார்கள்.

சிலநாளில் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

பணமும் அவனின் கல்லாப்பெட்டியில் சேரத் தொடங்கியது.

ஆசை அதிகம் ஆனது.

சுத்தமான சரக்கினை வாங்கி அதை அப்படியே விற்றால் அதிகமான லாபம் கிட்டாது என்பதை அவனுக்கு வாய்த்தவர்கள் சொன்னபோது விழித்துக் கொண்டான்.

சுத்தமான பொருள்களை வாங்கி வந்து அதில் கலப்படம் செய்ய ஆரம்பித்தான். அதைச் சற்று மலிவாகவும் விற்பனை செய்தான். மலிவாகக் கிடைக்கிறதே, அது சுத்தமானதா? என்று சற்றும் யோசிக்காமல் அவனிடமே  அதிகமாக வாங்கினார்கள். அவனின் கல்லாப்பெட்டியைப் போலவே தொந்தியின் கனமும்  கூடியது.

ஒரு நாள் எதிர்க் கடையில் சரக்கினை வாங்கிப் பார்த்தான் அழகர்சாமி. பொருள்கள் கலப்படமாய் இருக்கிறது என்பது அவனின் கண்களுக்குப் புலப்பட்டது. அதைச் சொன்னால் யார் எடுத்துக் கொள்வார்கள்? ‘பொறாமையால் பேசுகிறான் என்றுதானே இந்த முட்டாள் உலகம் தன்னை இழித்துரைக்கும்’ என்று நினைத்துப்  பேசாமல் இருந்துவிட்டான்.

அவனின் கடையில் வியாபாரம் ஏதோ ஓரளவு நடந்து கொண்டிருந்தது. அதற்காக அவன் சோர்ந்து விடவில்லை. எதிர்க்கடையில் கலப்படப் பொருட்களைக் கண்மூடி வாங்கும் அப்பாவி மக்களுக்காகவும் அவனுக்காகவும் வருந்தவும் செய்தான்.

ஒருநாள் திடீரென்று ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து நான்கைந்து பேர் இறங்கினார்கள். கோட்டீஸ்வரன் கடைக்குள் நுழைந்தார்கள். அங்குள்ள பொருள்களை எடுத்தார்கள். தாம் கொண்டுவந்த பொருட்களோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். அவர்களுக்குள்ளாக ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் கடையை மூடச் சொன்னார்கள். கோட்டீஸ்வரன் ‘திறுதிறு’வென்று விழித்தான். தான் செய்துவந்த கலப்பட விஷயம் அரசாங்கத்திற்குத் தெரிந்துவிட்டதை உணர்ந்தபோது அவன் உடனே பணத்தை எடுத்து அவர்களிடம் நைசாக நீட்டினான்.

பற்களைக் காட்டிப் பசப்பினான். அதிகாரிக்குக் கோபம் அதிகமானது. செய்த அயோக்கியத்தனத்திற்குத் தன்னை அடி பணியச் செய்வதற்காக லஞ்சம் தருகின்ற கோட்டீஸ்வரனை வேனில் ஏற்ற உத்தரவிட்டார் அதிகாரி.

கடை சீல் வைக்கப்பட்டது.

ஜீப்பில் ஏறிய கோட்டீஸ்வரன் தலையைத் தொங்கவிட்டபடியே அமர்ந்திருந்தான். ஊரே அவனைத் திட்டித் தீர்த்தது.

அழகர்சாமியின் நெஞ்சம் அப்போதுகூட அவனுக்காக வருந்தியது.

“உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யும் எண்ணம் ஒருவன் மனதில் உருவாகிவிட்டால் அவனுக்கு அவனே எமனாகிவிடுகிறான். மேலும் அடுத்தவனை ஒடுக்க நினைத்தால் அவனே ஒடிந்து போவான்.”

(திரு. இராகவேந்திரர் அவர்கள் எழுதிய, “பொன்மொழிக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இக்கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post: